அனுபவமிக்க பேட்டிங் வரிசைக்கும், அனுபவமில்லாத பௌலிங் வரிசைக்கும் இடையேயான தொடர்
வெள்ளி, 1 அக்டோபர் 2010 (09:43 IST)
webdunia photo
FILE
ஆஸ்ட்ரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை மொகாலியில் நடைபெறுகிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டி அக்டோபர் 9ஆம் தேதி முதல் பெங்களூரில் நடைபெறுகிறது.
அதன் பிறகு 3 ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள். முதலில் இது 7 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடராக மட்டுமே இருந்தது. ஆனால் இந்தியா தனது தரவரிசை நிலையான நம்பர் 1 நிலையைத் தக்கவைக்க இதனை 2 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடராக மாற்றியுள்ளது.
இதற்காக இரு நாட்டு கிரிக்கெட் வாரியம் மற்றும் வீரர்களை நாம் பாராட்டியே தீரவேண்டும். டெஸ்ட் கிரிக்கெட்தான் உண்மையான சவால்.
இரண்டு அணிகளுமே பந்து வீச்சில் பலவீனமாக உள்ளது எனவே இந்தத் தொடர் பலவீனமான பந்துவீச்சிற்கும் பலமான பேட்டிங் வரிசைக்குமான தொடராக அமையும்.
ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிராக இந்தியா தன் சொந்த மண்ணில் 4 தொடர்களை வென்றுள்ளது. ஆஸ்ட்ரேலியா ஒரே ஒரு தொடரை மட்டுமே கவாஸ்கர்-போர்டர் கோப்பை 1996ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டதிலிருந்து வென்றுள்ளது.
இந்த முறை ஆஸ்ட்ரேலிய அணியின் பந்து வீச்சு பலவீனமடைந்துள்ளது. ஆனாலும் அபாயகரமான பந்து வீச்சு வரிசையைக் கொண்டுள்ளது. இந்திய அணியின் பேட்டிங் சச்சின், சேவாக், திராவிட், லஷ்மண், ரெய்னா, தோனி ஆகியோரது திறமைகளை நம்பியுள்ளது.
webdunia photo
FILE
சச்சின், சேவாக், லஷ்மண் அபாரமான ஃபார்மில் உள்ளனர். திராவிட் இலங்கைக்கு எதிரான தொடரில் 3 டெஸ்ட்களிலும் சேர்த்து 19 ரன்களையே சராசரியாக வைத்துள்ளார்.
ஆஸ்ட்ரேலிய பந்து வீச்சில் ஜான்சன், ஹில்ஃபென்ஹாஸ், பீட்டர் ஜார்ஜ் அல்லது டக்கி போலிஞ்சர்,
webdunia photo
FILE
நேதன் ஹாரிட்ஸ், ஸ்மித் ஆகியோர் தவிர ஆல்ரவுண்டராக ஷென் வாட்சன் உள்ளார். கடந்த முறை சேவாக் அடித்துப் புரட்ட கம்பீர் இரட்டைச் சதமும், லஷ்மண் ஒரு இரட்டைச் சதமும் எடுத்தனர் சச்சின் ஒரு சதம் எடுத்தார். கங்கூலியின் கடைசி தொடர் கங்கூலியும் ஒரு சதம் எடுத்தார்.
பந்து வீச்சில் ஆஸ்ட்ரேலிய அணி பலவீனமாக இருந்தாலும் பேட்டிங்கில் பலமாகவே உள்ளது. சைமன் கேடிச், ஷேன் வாட்சன் துவக்கம் சமீபகாலங்களில் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. ரிக்கி பாண்டிங்கின் ஃபார்ம் கேள்விக்குறியாக உள்ளது, ஆனால் அவர் அபாயகரமான வீரர் அவர் நல்ல ஸ்கோரை எட்டினால் மற்ற ஆஸ்ட்ரேலிய பேட்ஸ்மென்களும் அவரிடமிருந்து ஊக்கம் பெறுவர். இதனால் இவரை முதலில் குறிவைத்துத் தகர்ப்பது அவசியம். மைக்கேல் கிளார்க், மைக் ஹஸ்சி இருவரில் ஹஸ்ஸிதான் நல்ல ஃபார்மில் உள்ளார். ஆனால் இந்திய ஆடுகளங்களில் மைக்கேல் கிளார்க் சிறப்பாக விளையாடி வருகிறார்.
இந்தியா இதுவரை பார்த்திராத மார்கஸ் நார்த், இவர் ஒரு எதிர்பாராத பேட்ஸ்மென், திடீரென சதங்களை எடுப்பார். பந்து வீச்சில் ஆஃப் ஸ்பின் வீசி பாகிஸ்தானை கடந்த முறை 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிர்ச்சியளித்தார்.
இந்த ஆஸ்ட்ரேலிய அணியில் நிறைய எதிர்பாராத் தன்மை உள்ளது. அது இந்திய அணிக்கு எப்போதும் ஆபத்தாகவே போய் முடியும். மாறாக இந்திய அணியில் அவர்களுக்கு ரெய்னா மட்டுமே எதிர்பாராத திடீர்ச் சேர்க்கை. ஆனால் இந்திய அணிக்கு ஹில்ஃபென்ஹாஸ், ஹாரிட்ஸின் பேட்டிங், நார்த்தின் திடீர் பன்முகத் திறன் வெளிப்பாடு, புதிய வீரர் பீட்டர் ஜார்ஜ் அணியில் சேர்க்கப்பட்டால் முற்றிலும் புதிய ஒரு வீரரின் பந்து வீச்சை இந்திய எதிர்கொள்ளுதல் என்ற அதிர்ச்சிகள் இந்தியாவுக்கு நிறைய உள்ளது.
இந்த எதிர்பாராத் தன்மைதான் ஆஸ்ட்ரேலியாவின் இந்த அணியின் பலமும் பலவீனமும். ஆனால் இந்திய அணியின் பந்து வீச்சு சரியாக இல்லை. ஜாகீர் கான் காயத்திலிருந்து வந்தாலும் அனுபவமிக்கவர், இஷாந்த் ஷர்மாவின் பந்து வீச்சு குறித்து பிரசாத் கூறிய உத்திரீதியான தவறுகள் உள்ளது. அதனை அவர் திருத்திக் கொள்ளவில்லையெனில் கிரீஸிற்கு அருகே வந்து அதிகம் குனிந்து திசையை, அளவை கோட்டை விடும் வாய்ப்புகள் உள்ளது.
ஸ்ரீசாந்த் பயிற்சி ஆட்டத்தில் நன்றாக வீசினார். சிக்கனமாக வீசினார். ஆனால் விக்கெட்டுகள் எடுக்க முடியவில்லை. ஆனால் இவரிடம் உள்ள திறமை டெஸ்ட் போட்டிகள் என்று வந்து விட்டால் வித்தியாசமாக வீசுவார். இவர் ரிதம் பௌலர், ரிதம் கிடைத்து விட்டால் அன்று அவரது தினம்.
webdunia photo
FILE
ஆனாலும் ஆஸ்ட்ரேலிய வீரர்களுக்கு முன்னர் நன்றாக வீசிய இஷாந்திற்குத்தான் தோனி வாய்ப்பளிப்பார் என்று எதிர்பார்க்கலாம். ஹர்பஜன் சிங் கடந்த 12 மாதங்களில் வைத்திருக்கும் சராசரி 46. அவரது பந்து வீச்சின் தரம் குறைந்து கொண்டே வருகிறது.
உதவிகரமான ஆட்டக்களத்தில் ஷாட் ஆஃப் லெந்த்தில் வீசி ஷாட் லெக், பேக்வர்ட் ஷாட் லெக், சில்லி மிட் ஆன் ஆகிய இடங்களில் ஃபீல்டர்களை நிறுத்தி விக்கெட்டுகளை வீழ்த்துபவர் ஹர்பஜன். ஆனால் உதவியில்லாத ஆட்டக்களங்களில் இவர் ஃபிளைட், ஆர்க், லூப் போன்ற கைத்திறனில்தான் விக்கெட்டுகளை வீழ்த்த முடியும். ஆனால் அவர் இன்னமும் அந்த பழைய ஷாட்பிட்ச் லைனை நம்பி வீசி வருகிறார். அதனால் விக்கெட்டுகளை வீழ்த்த முடியாமல் திணறுகிறார். இந்தப் போக்கை அவர் மாற்றிக் கொள்ளவேண்டும். மூத்த வீரர்கள் அவருக்கு ஆலோசனை வழங்கவேண்டும், தொடர்ந்து அவ்வாறே வீசினால் அணியை விட்டுத் தூக்க வேண்டும். உள்நாட்டு கிரிக்கெட்டில் ஆட வைக்க வேண்டும்!
webdunia photo
FILE
அமித் மிஷ்ராவின் லெக்-ஸ்பின்னும் சந்தேகத்திற்கிடமாக உள்ளது. ஆனால் ஆஸ்ட்ரேலிய அணிக்கு சுழற்பந்துகள் மீதான பாரம்பரிய வெறுப்பினால் மிஷ்ரா நிச்சயம் விக்கெட்டுகளை வீழ்த்தலாம். ஏன் இந்திய அணிக்கு போட்டியையே வெற்றிபெற்றுத் தரலாம்.
இந்திய பேட்டிங்கில் கம்பீரின் ஃபார்ம் கவலைக்கிடமாக உள்ளது. குறிப்பாக பயிற்சி ஆட்டத்தில் அவர்
webdunia photo
FILE
ஷாட் பிட்ச் பந்தில் ஆட்டமிழந்தவிதம் அவரது ஆட்டத்திறனின் வீச்சைக் காட்டுவதாய் அமைந்துள்ளது. இந்த ஒரு பலவீனத்தை அவர் இந்தத் தொடரில் ஆட்கொண்டால்தான் அவரது எதிர்கால கிரிக்கெட் சிறக்கும் என்பதில் ஐயமில்லை.
பொதுவாக இந்திய கிரிக்கெட் ஆட்டக்களங்கள் இப்போதெல்லாம் பெரிய அளவுக்கு ஒருவருக்கும் உதவிபுரிவதில்லை. 5ஆம் நாள் கூட பிட்ச் மட்டையாக உள்ளது. எல்லாமே நட்பார்ந்த முறையில் சென்று கொண்டிருக்கிறது. இதில் வீரர்களின் திறன்கள்தான் வெற்றி தோல்விகளை தீர்மானிக்கின்றன.
குறிப்பாக ஆஸ்ட்ரேலியாவுடன் விளையாடுவது ஏன் கடினம் என்றால் அவர்களுக்கு வெற்றி ஒன்றே குறி, அது எந்த வித மோசமான அணியாக இருந்தாலும் சரி, தங்கள் அணி எவ்வளவு பலவீனமாக இருந்தாலும் சரி! அந்த அணியின் பாரம்பரியம் அவ்வாறு. அவர்களின் மனோநிலை அவ்வாறு. கிரிக்கெட் போராளிகள் அவர்கள்.
ஆனால் இந்தியாவை பீடித்திருக்கும் தோல்வி பயம் அவர்களை டிராவை நோக்கி இன்னும் கூட சிந்திக்கத் தூண்டுகிறது. இந்த மனோநிலையை உடைத்தவர் கங்கூலி, அதன் பிறகு கும்ளே, தோனி தோல்வி கண்டு அசைபவரில்லை என்றாலும் அதுவே அவரை வெற்றியை விரும்பும் கேப்டனாக இன்னும் மாற்றவில்லை. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த ஒரு வித்தியாசம்தான் இந்தத் தொடரின் வெற்றி தோல்விகளை நிர்ணயிக்கவுள்ளது.
நாம் டிராவை நோக்கி போட்டியை தள்ளினாலும் அவர்கள் தொடர்ந்து வெற்றிக்காகவே போராடுவார்கள் இதனால் இந்திய பேட்ஸ்மென்களுக்கும் பந்து வீச்சாளர்களுக்கும் கடும் நெருக்கடி ஏற்படும்.
இந்திய அணியின் வெற்றியைத் தீர்மானிப்பதும் ஆஸ்ட்ரேலிய அணியின் பந்து வீச்சாளர்களை அச்சம்கொள்ளவைப்பதும் சேவாகின் கையிலேயே உள்ளது. ஆனால் அவருக்கு ஷாட்பிட்ச் பந்துகளை வீசி கட்டுப்படுத்துவோம் என்று ஆஸ்ட்ரேலியா கூறியுள்ளது.
webdunia photo
FILE
இது பற்றி இயன் சாப்பலிடம் கேட்டபோது இதற்கெல்லாம் சேவாக் அசருபவரில்லை. அவரது பேட்டிங் அணுகுமுறை எப்போதும் மாறப்போவதில்லை என்று கூறியுள்ளார் இயன் சாப்பல். சமீபமாக சேவாகின் அதிவேக சதங்கள் இந்திய அணிக்கு வெற்றியைப் பெற்றுத் தந்துள்ளது என்பதை ஒருவரும் மறக்க முடியாது.
தென் ஆப்பிரிக்கா இங்கு கடந்த முறை வந்து விளையாடிய போது இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும்
webdunia photo
FILE
சேவாக் சதம் எடுத்தார். முதல் டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட்டுகளை வீழ்த்திய டேல் ஸ்டெய்ன் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் 4 ஓவர்களில் 30 ரன்களை சேவாகிடம் வாங்கிக் கட்டிக்கொண்டார் தொடர்ந்து சேவாக் 168 ரன்களை எடுத்தார். சச்சினும் சதம் எடுத்தார் இந்தியா பரபரப்பான அந்த டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்று தொடரை 1-1 என்று சமன் செய்தது. நம்பர் 1 இடத்தையும் தக்கவைத்தது.
இந்தத் தொடரிலும் சேவாக் அபாரமாக விளையாடினால் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்.
இரு அணிகளிலும் நிறைய எதிர்பாராத் தன்மை இருப்பதால் ஒரு சுவராஸ்யமான தொடரை எதிர்பார்க்கலாம். இரு அணிகளும் 1-1 என்று டெஸ்ட் தொடரை சமன் செய்ய வாய்ப்புள்ளது.