வருஷம் 16 படத்தில் இடம்பெற்ற பூப்பூக்கும் மாசம் உட்பட மொத்தப்படமும் கன்னியாகுமரி எல்லையில் உள்ள திருவாங்கூர் சமஸ்தானத்திற்க்கு சொந்தமான பத்மனாபபுரம் அரண்மனையில் எடுக்கப்பட்டது அதுவரை இங்கு முழுப்படமும் எடுக்க அனுமதி கிடைத்ததில்லை சினிமாவில் பத்மனாபபுரம் பேலஸ் முழுவதும் முதன் முதலாக இவரது கேமராவுக்குள் வந்தது.
அழகு கவிதை படங்கள் மட்டுமின்றி திகில் படங்களிலும் இவரது கேமரா புகுந்து விளையாடியிருக்கும் பாஸில் இயக்கிய சந்திரமுகியின் ஒரிஜினலான மணிச்சித்திரதாழுவிற்க்கும் இவரது கேமராவின் பங்கு அபாரமானது பத்மனாபபுரத்தின் இருட்டறைகளை அருமையாக காண்பித்திருப்பார். மேலும் கிளிப்பேச்சு கேட்கவா, பூவிழி வாசலிலே போன்ற படங்களும் இந்த திகில் பட ரகத்தில் அடக்கம். பாஸில் இயக்கிய பொம்முக்குட்டி அம்மாவுக்கு, கற்பூர முல்லை, வருஷம் 16, அரங்கேற்ற வேளை, காதலுக்கு மரியாதை, கண்ணுக்குள் நிலவு உள்ளிட்ட படங்களில் இவரது கேமரா புகுந்து விளையாடியுள்ளது.