கடந்தவார படங்களின் வசூல் ஒரு பார்வை

வெள்ளி, 9 டிசம்பர் 2016 (14:35 IST)
சென்ற வாரம் வெளியான படங்கள் பணத்தட்டுப்பாட்டையும் மீறி ஓரளவு வசூலை பெற்றுள்ளன. சைத்தான் படத்தின் ஓபனிங் ஆச்சரியமூட்டுகிறது.

 
 
கடவுள் இருக்கான் குமாரு ஓபனிங்கில் வசூலித்த பணத்துடன் முடங்கிவிட்டது. சென்றவார இறுதியில் 27 ஆயிரங்களை மட்டுமே சென்னையில் வசூலித்துள்ளது. கடந்த ஞாயிறுவரை இந்தப் படம் சென்னையில் 1.60 கோடியை மட்டும் வசூலித்துள்ளது.

 
 
அச்சம் என்பது மடமையடா படமும் ஓபனிங்கைத் தாண்டி பெரிதாக வசூலிக்கவில்லை. சென்னையில் கடந்தவார இறுதியில் இந்தப் படம், 4.90 லட்சங்களை வசூலித்த இப்படம், கடந்த ஞாயிறுவரை சென்னையில் 5.80 கோடிகளை வசூலித்துள்ளது.
 
கவலை வேண்டாம் திரைப்படம் சென்ற வார இறுதியில் 5.03 லட்சங்களை வசூலித்துள்ளது. கடந்த ஞாயிறுவரை அதன் சென்னை வசூல், 1.85 கோடி. இந்திப் படமான டியர் ஜிந்தகி கடந்தவார இறுதியில் சென்னையில் 10.35 லட்சங்களை வசூலித்துள்ளது. கடந்த ஞாயிறுவரை இதன் சென்னை வசூல், 92 லட்சங்கள்.
 
ஆங்கிலப் படமான அண்டர்வேர்ல்ட் - பிளட் வார்ஸ் சென்றவாரம் வெளியானது. சென்னையில் முதல் மூன்று தினங்களில் இதன் வசூல், 16 லட்சங்கள்.
 
சென்ற வாரம் வெளியான இன்னொரு ஆங்கிலப் படமான Moana முதல் 3 தினங்களில் சென்னையில் 17.44 லட்சங்களை வசப்படுத்தியுள்ளது.
 
இந்திப் படமான கஹானி 2 சென்ற வாரம் வெளியானது. கஹானி ஹிட் என்பதால் இரண்டாம் பாகத்துக்கு நல்ல கூட்டம். முதல் 3 தினங்களில் இந்தப் படம் சென்னையில் 25.51 லட்சங்களை வசூலித்துள்ளது.
 
சென்ற வாரம் வெளியான மாவீரன் கிட்டு முதல் 3 தினங்களில் சென்னையில் 59.41 லட்சங்களை வசூலித்துள்ளது. விஷ்ணு விஷால் படத்துக்கு இது நல்ல வசூல்தான்.
 
அதிகம் எதிர்பார்க்கப்பட்ட விஜய் ஆண்டனியின் சைத்தான் சென்ற வாரம் வெளியானது. முதல் 3 தினங்களில் அபாரமாக 1.47 கோடியை படம் வசூலித்து அசத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்