ஆடி வெள்ளியன்று மாலை நேரத்தில் ஆலயங்களில் குத்து விளக்குப் பூஜை நடைபெறும். 108 அல்லது 1008 விளக்குகள் வைத்துப் பூஜை செய்வார்கள். அப்போது சுமங்கலிப் பெண்களுக்கு தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம் ஆகியவற்றோடு ரவிக்கைத் துணியும் வைத்துத் தருவது வழக்கமாக உள்ளது.
அம்மனுக்கு பிடித்த உணவுகள் என்றால் அது வேம்பு, கூழ், எலுமிச்சை ஆகியவை ஆகும். இவை உடல் நலத்திற்கு நன்மை அளிப்பவை ஆகும். வியாதியை தடுப்பதற்கும் உதவுகின்றன. ஆடி கடைசி வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமிக்கு உகந்த வரலட்சுமி விரதம் மேற்கொண்டு வழிபாடு செய்தால் வளங்கள் அனைத்தும் வந்து சேரும்.