மகரம்: ஆடி மாத ராசி பலன்கள்

புதன், 17 ஜூலை 2019 (13:11 IST)
உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம் - கிரகநிலை: ராசியில் சந்திரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் புதன் (வ), சுக்ரன், ராஹூ - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய், சூர்யன் - லாப ஸ்தானத்தில் குரு (வ)  - விரைய ஸ்தானத்தில் சனி (வ), கேது  என  கிரகங்கள் வலம் வருகின்றன.
பலன்: இந்த மாதம் வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்படும். பயணங்கள் மூலம் லாபம் கிடைக்கும். மனதில் மகிழ்ச்சி ஏற்படும்படியான காரியங்கள் நடக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் உண்டாகும். மனோ தைரியம் அதிகரிக்கும். புத்தி தெளிவு உண்டாகும்.
 
தொழில் வியாபாரம் வாக்கு வன்மையால் சிறப்பாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகலாம். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். உத்தியோகம் தொடர்பான பயணங்கள்  செல்ல நேரலாம். உத்தியோகஸ்தர்கள் புத்தி சாதூரியத்தால் மேல் அதிகாரிகள் கொடுத்த வேலையை  சிறப்பாக செய்து முடிப்பார்கள்.
 
குடும்பத்தில் வெளிநபர்களால் ஏதாவது குழப்பம் ஏற்படலாம். சொந்த விஷயங்களுக்கு அடுத்தவர் ஆலோசனைகளை கேட்பதை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவி ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசுவதன் மூலம் இடைவெளி குறையும். பிள்ளைகள்  நலனுக்காக செலவுகள்  செய்ய வேண்டி இருக்கும்.
 
பெண்களுக்கு எதிலும் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பாராமல் பயணத்தில் தடங்கல் ஏற்படலாம். அரசியல்வாதிகள் சகாக்களை  பகைத்துக் கொள்ள வேண்டாம். கட்சித் தலைமையின் ஆதரவு கிட்டும். கட்சி மேல்மட்டத்தால் அலைக்கழிக்கப்படுவர்.
 
கலைத்துறையினரின் படைப்புகளுக்கு மதிப்பு, மரியாதை கூடும். நல்ல வரவேற்பு கிடைக்கும். உங்களது கலைத்திறன் வளரும். மாணவர்கள் சகமாணவர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. கல்வியில் அதிக கவனம் தேவை..
 
உத்திராடம் 2, 3, 4 பாதம்: இந்த மாதம் எதிர்ப்புகள்  விலகும். காரிய தடை தாமதம் நீங்கும். ஆரோக்கியம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த பிரச்சனைகள் தீரும்.  முடிவு எடுக்க முடியாமல் இழுபறியாக இருந்த விஷயங்களில் நல்ல முடிவு கிடைக்கும்.
 
திருவோணம்: இந்த மாதம் புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. இழுபறியாக பாதியில்  நின்ற காரியம் நன்கு நடந்து முடியும். விரும்பிய காரியத்தை நிறைவேற்ற தேவையான மனோ பலம் கிடைக்கும். வராமல் நின்ற பணம் கைக்கு வந்துசேரும். புதிய நபர்களின் நட்பும், அதனால்  மன மகிழ்ச்சியும் ஏற்படும். மதிப்புகள் கூடும்.
 
அவிட்டம் 1,2 பாதம்: இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். வேலைபளு குறையும். திறமையான பேச்சின் மூலம் சக ஊழியர்களின் நட்பை  பெறுவீர்கள்.
 
பரிகாரம்: சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வணங்கி வர கஷ்டங்கள் நீங்கும். ஆரோக்கியம் உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - செவ்வாய் - வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்:  ஆகஸ்டு 3, 4
அதிர்ஷ்ட தினங்கள்: ஜூலை 27, 28.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்