தேய்பிறை பஞ்சமி நாளில் அன்னை வாராஹியின் வழிபாட்டு பலன்கள் !!
வெள்ளி, 24 டிசம்பர் 2021 (05:18 IST)
பஞ்சமி திதி நாளில் அதிகாலை எழுந்து, குளித்து நீராடி, வீட்டிலிருக்கும் பூஜையறையில் குலதெய்வ வழிபாடு, விநாயகர் பூஜை செய்ய வேண்டும். விரல் மஞ்சள், குங்குமம் வைத்து வழிபடலாம்.
வேண்டுதல்களை நிறைவேற சங்கல்பம் செய்து , எளிய ஸ்லோகங்களில் ஆராதனை செய்யலாம். பச்சை கற்பூரம் கலந்த பால்,தோலுடன் கூடிய உளுந்து வடை , வெண்ணெய் சேர்த்த தயிர் சாதம், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, எள்ளுருண்டை இவற்றை நைவேத்தியமாக வைத்து வழிபடுவது சிறப்பான பலன்களை தரும்.
மாலை வேளைகளில் அருகில் இருக்கும் ஆலயங்களில் வாராஹி தரிசனம் செய்து , விரல் மஞ்சள் மாலை சமர்ப்பித்து, தேங்காயில் விளக்கேற்றி வழிபாட்டை நிறைவு செய்யலாம்.
இதன்படி தொடர்ந்து ஐந்து பஞ்சமிகளில் வாராஹியை வழிபாடு செய்து வர கேட்ட வரங்களை அள்ளித் தருவாள் வாராஹி. மேலும் இன்றைய தினத்தில் நம்மால் இயன்ற அளவு அன்னதானம் செய்வது , பானகம், நீர் மோர் வழங்குதல் இவற்றையும் செய்திட வாழ்வை குளிர்ச்சியாகவும், இனிமையாகவும் ஆக்குவாள் வாராஹி.
ஆலயங்களில் உள்ள ஸ்ரீ வாராஹி தேவிக்கு சிவப்பு நிற ஆடைகளை அணிவிக்க காரியத் தடைகள் நீங்கும்.வெள்ளைப் பட்டு அணிவிக்க வாக்கு வன்மை ,கல்வியில் மேன்மை உண்டாகும்.மஞ்சள் பட்டு அணிவிக்கக் குடும்பத்தில் மங்கள காரியங்கள் நடைபெறும், திருமணத்தடை நீங்கும்.பச்சைப் பட்டு அணிவிக்கச் செல்வப் பெருக்கு ஏற்படும். நீலவண்ணப் பட்டு அணிவிக்க எதிர்ப்புகளில் வெற்றி கிட்டும்.
ஸ்ரீ வாராஹி உபாசகர்கள் விளக்கிற்கு பஞ்சு, தாமரைத்தண்டு, வாழைத்திரி பயன்படுத்தலாம். அதிலும் தாமரைத்தண்டு திரி மிகச் சிறந்தது.