குரு பகவான் வழிபாட்டிற்குரிய வியாழன்: சிறப்புகள் என்ன?

வியாழன், 23 டிசம்பர் 2021 (09:01 IST)
வாரத்தில் வரும் ஏழு நாட்களில் வியாழக்கிழமை பிரகஸ்பதி எனப்படும் குரு பகவான் வழிபாட்டிற்குரிய தினமாக இருக்கிறது. 

 
எந்த ஒரு மாதத்திலும் சுக்ல பட்சம் எனப்படும் வளர்பிறையிலும், வியாழக்கிழமைகளிலும் இந்த விரதத்தை மேற்கொள்ளலாம். ஒருவர் தேவர்களுக்கு தகுந்த அறிவுரைகளை கூறி, வழி நடத்தும் தேவ குருவாகிய பிரகஸ்பதி என்னும் குருவும், அசுரர்களுக்கு குருவாகி அவர்களை வழி நடத்தும்  சுக்கிராச்சாரியார் என்னும் அசுர குருவும் ஆவார். 
 
கற்பித்தல் மூலம் அடுத்த தலைமுறைகளை நல்வழிப்படுத்தும் பணியில் உள்ள ஆசானாகிய குரு பகவானை(பிரகஸ்பதி) பற்றி பார்ப்போம். குருவுக்குரிய மலர் ஸ்ரீ முல்லை, குருவுக்குரிய தானியங்கள் ஸ்ரீ கொண்டைக்கடலை, பச்சைக்கடலை. குருவுக்குரிய வாகனம் ஸ்ரீ யானை. குருவுக்குரிய நவரத்தினம் ஸ்ரீ புஷ்பராகம். குருவின் ஆதிக்க எண் ஸ்ரீ 3. குருவின் அதிதேவதை ஸ்ரீ பிரம்மன். குருவின் வடிவம் ஸ்ரீ நீண்ட சதுர வடிவம் .
 
குரு பகவானின் இயல்புகள்:
* இவர் மஞ்சள் நிறத்தை தன்னகத்தே கொண்டவர்.
* குரு புத்தி காரகன். மூளையின் செயல்பாட்டிற்கு அதிபதியும் இவரே. 
* இவர் பெருந்தன்மையான குணத்தை கொண்டவர்.
 
குருவின் காயத்ரி மந்திரம்:
ஓம் வ்ருஷ பத்வஜாய வித்மஹே
க்ருணி அஸ்தாய தீமஹி
தன்னோ குரு ப்ரசோதயாத் !!

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்