முதலில் விளக்கை ஏனோ தானோ என்று துலக்கி வைக்கக்கூடாது. நன்கு சுத்தமாக பளிச்சிடும் வண்ணம் துலக்க வேண்டும். பச்சை பயிறு, பச்சரிசி, எலுமிச்சைத் தோல், வெந்தயம் இவற்றை உலரவைத்து அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த கலவையை கொண்டு துலக்கினால் புத்தம்புது விளக்கு போல் பளிச்சிடும். இதில் சிறிது சிகைக்காய் சேர்த்து துலக்கினால் மேலும் சிறப்பான ஒளியை தரும்.
ஞாயிறு, திங்கள், வியாழன், சனி ஆகிய நாட்களில் மட்டும் தான் குத்துவிளக்கை துலக்க வேண்டும். செவ்வாய், புதன், வெள்ளி இந்த நாட்களில் குத்துவிளக்கை துலக்குவது கூடாது.
எனவே செவ்வாய், புதன், வெள்ளி இந்த மூன்று நாட்களிலும் குத்து விளக்கை துலக்குவதை தவிர்ப்பது அந்த குடும்பதிற்கு மேன்மையை தரும்.