பலவித திரிகளும் பலன்களும் பற்றி தெரிந்துக்கொள்வோம்....!!

பெரும்பாலான வீடுகளில், பருத்திப் பஞ்சால் செய்யப்பட்ட திரியைத்தான் பயன்படுத்துகிறார்கள். பருத்திப் பஞ்சுத் திரி மட்டுமல்லாது, இன்னும் சில வகைத்  திரிகளை விளக்கேற்றுவதற்குப் பயன்படுத்தலாம். ஒவ்வொரு திரிக்கும் ஒவ்வொரு வித பலன் உண்டு.

பஞ்சுத் திரி: பருத்திப் பஞ்சைக் கொண்டு செய்யப்பட்ட திரியைப் பயன்படுத்தினால் பித்ருக்களால் ஏற்பட்ட சாபமும், வம்சாவளிப் பிரச்னைகளும் நீங்கும்.
 
மஞ்சள் துணி திரி: மஞ்சள் துணியைக்கொண்டு செய்யப்பட்ட திரியைப் பயன்படுத்தினால், அனைத்து வியாதிகளும் நீங்கும், செய்வினை போன்ற பிரச்னைகள்  நீங்கிப் பூரண அருள் கிட்டும்.
 
சிவப்பு நிற திரி: சிவப்பு வண்ணத்தினாலான துணியைக்கொண்டு செய்யப்பட்ட திரியைப் பயன்படுத்தினால், திருமணத் தடை நீங்கும், குழந்தைப் பேறு கிட்டும்.
 
வெள்ளைத்துணி திரி: வெள்ளைத் துணியைத் திரியாகச் செய்து, பன்னீரில் நனைத்துப் பயன்படுத்தினால், மனக் குழப்பங்கள் நீங்கி, தெளிவான சிந்தனைகள்  உருவாகும்.
 
வெள்ளெருக்குத் திரி: வெள்ளெருக்கம் பட்டையால் செய்யப்பட்ட திரியைப் பயன்படுத்தினால் பொருளாதாரப் பிரச்னைகள் நீங்கி, செல்வ வளம் அதிகரிக்கும்.
 
தாமரைப்பூ தண்டு திரி: தாமரைப்பூ தண்டைக் கொண்டு செய்யப்பட்ட திரியைப் பயன்படுத்தினால், முன்வினைக் கர்ம பாவங்கள் அனைத்தும் நீங்கி, வாழ்க்கை  வளப்படும்.
 
வாழை நார்த் திரி: வாழைத்தண்டு நாரைக்கொண்டு செய்யப்பட்ட திரியைப் பயன்படுத்தினால், குடும்பப் பிரச்னைகள், நிலம் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் நீங்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்