பணத்தை வசப்படுத்தக்கூடிய தன்மை கொண்ட வசம்பு !!

உங்கள் வீட்டிற்கு கொண்டு வந்த வசம்பை பூஜை அறையில் வைத்து, ஒரு சிறிய மண் அகல் விளக்கில் கொஞ்சமாக நெய் ஊற்றி, திரி போட்டு தீபம் ஏற்றி, பூஜை அறையில் வைத்திருக்கும் வசம்பை எடுத்து அந்த தீபச்சுடரில் நன்றாக எரிய விடவேண்டும்.


வசம்பின் ஒரு முனையை உங்கள் கையில் பிடித்துக் கொள்ளுங்கள். மற்றொரு முனையை நெருப்பில் காட்டுங்கள். வசம்பு நன்றாக எரிந்த பின்பு, அதை லேசாக இடித்தால் சாம்பலாக உங்களுக்கு கிடைக்கும். 
 
இந்த வசம்பு பொடியை அப்படியே வைத்துக்கொள்ளுங்கள். ஒரு வெள்ளை நிறத் துணியில் பச்சை கற்பூரம் சிறிய துண்டு, ஏலக்காய் 2, கிராம்பு 2, கொஞ்சமாக  கல்லுப்பு, நீங்கள் தயார் செய்து வைத்திருக்கும் வசம்பு பொடி சிறிதளவு இந்தப் பொருட்களை எல்லாம் மகாலட்சுமி தாயை வேண்டி, சுக்கிர பகவானையும்  நினைத்து அந்த வெள்ளைத் துணியில் வைத்து பச்சை நிற நூலை கொண்டு சிறிய முடிச்சாக கட்டி கொள்ள வேண்டும். 
 
வசம்பு பொடி கருப்பு நிறத்தில்தான் இருக்கும் பரவாயில்லை. உங்கள் வீட்டில் நெய் தீபத்தில் பொசுங்கிய இந்த கருப்பு வசம்பு பொடிக்கு வசிய தன்மை அதிகம். இந்த மூட்டையை நீங்கள் எந்த பொருட்கள் இருக்கும் இடத்தில் வைக்கின்றீர்களோ, அந்த இடத்தில் இருக்கக் கூடிய பொருள் பன்மடங்காகப் பெருகும். 
 
எடுத்துக்காட்டுக்கு நகை வைக்கும் பெட்டியில் இந்த சிறிய முடிச்சை வைத்தால், நகையை நிறைய வாங்கும் யோகம் கிடைக்கும். பணம் வைக்கும் இடத்தில் வைத்தால் பணம் பல மடங்கு பெருகும். 
 
வீட்டில் புத்தகங்கள் இருக்கும் இடத்தில் வைத்தால் உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் நல்ல அறிவைப் பெற்று நன்றாக படிக்கும் திறமை வாய்ந்தவர்களாக மாறிவிடுவார்கள். இப்படியாக இந்த பொருளை எங்கு கொண்டுபோய் வைத்தாலும் அந்த இடத்தில் இருக்கும் பொருள் உங்கள் வசமாகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்