குத்துவிளக்கின் அடிப்பாகம் பிரம்மதேவரையும், நடுப்பாகம் மகாவிஷ்ணுவையும், மேல்பாகம் ஈஸ்வரனையும் அம்சமாய் கொண்டுள்ளது. விளக்கில் ஊற்றும் நெய்யானது நாதம் என்றும், திரியானது பிந்து என்றும், சுடர்விட்டு எரியும் சுடர் ஆனது உலக இயக்கங்களுக்கு அடிப்படையான சக்தியின் அம்சமான மலைமகளையும் குறிக்கிறது என்று கூறுவார்கள்.