சகல தோஷங்களுக்கு நிவாரணம் தரும் வலம்புரி சங்கு !!

திங்கள், 13 டிசம்பர் 2021 (16:25 IST)
வலம்புரி சங்குகளை கோவில்களிலும்,வீடுகளிலும் செய்யப்படும் பூஜைகளில் அதிகமாகவே பயன் படுத்திருக்காங்க.ஏனெனில் வலம்புரி சங்கு ஒரு தெய்வீக பொருளாகவும் அதிர்ஷ்டம் நிறைந்த பொருளாக வழங்கப்பட்டுவந்துள்ளது.

வலம்புரி சங்கு என்பது சங்குவகைகளில் காணப்படக்கூடிய ஒரு அரியவகை சங்கு ஆகும். இவை வலது பக்கம் சுழிந்து காணப்படும்.
 
சங்குகளில் பெரும்பாலும் பல வகைகளில் காணப்பட்டாலும் வலம்புரிச்சங்கு சிறப்பு தன்மையுடையதாக காணப்படுகிறது.
 
கடலில் பிறக்கும் ஒரு சங்கில் சுருண்டிருக்கும் வரிகள் வாய்ப் பகுதியில் ஆரம்பித்து வலதுபுறமாக சுழன்று முடிந்தால், அது வலம்புரிச் சங்கு. காதில் வைத்துக் கேட்டால் அது ‘ஓம்’ என்ற சப்தத்தை எழுப்பும்.
 
சங்குகளில் இரண்டு வகைகள் உண்டு. இடப்பக்கம் சுழிந்து செல்லும் சங்குகள் உலகில் எளிதாகக் கிடைக்கும். வலது பக்கம் சுழியுடைய வலம்புரிச் சங்குகள் அபூர்வமாகவே கிடைக்கும்.
 
வலம்புரிச் சங்குகளை இந்துக்கள் மிகவும் புனிதமாகக் கருதுகின்றனர். வீட்டில் அலங்காரமாக வைக்கப்பட்டிருக்கும் வலம்புரி சங்கானது, குபேரனது அருளை பெற்றுத் தருவதோடு, மகாலட்சுமியின் நித்திய வாசத்தையும் அருளக்கூடியது.
 
வலம்புரி சங்கில் தீர்த்தம் துளசி இட்டு பூஜை செய்து மங்கள ஸ்நானம் செய்வது, சகல தோஷ நிவாரணம் ஆகும். வலம்புரி தீர்த்தம் கொண்டு சுவாமிக்கு அபிஷேகம் செய்வித்தாலும் கடும் தோஷங்கள் விலகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்