வியாழக்கிழமை மாலை வேளையில் வீட்டு வாசலில் தண்ணீர் தெளித்து, பச்சரிசி மாவினால் கோலம் போட்டு அதற்கு செம்மண் பட்டை இட்டு அழகுபடுத்த வேண்டும். நிலைப்படிக்கு மஞ்சள் தெளித்து சந்தனம் குங்குமம் வைக்க வேண்டும்.
புள்ளிகள் இல்லாத எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி, ஒரு பகுதியில் மஞ்சளும் மற்றொரு பகுதியில் குங்குமமும் தடவ வேண்டும். நிலைப்படிக்கு ஒரு பக்கத்தில் மஞ்சள் தடவிய எலுமிச்சை பழத்தையும், மறு பக்கத்தில் குங்குமம் தடவிய எலுமிச்சை பழத்தையும் இருபுறமும் வைக்கவும். நிலைப்படிக்கு இருபுறமும் பூ வைக்க வேண்டும். தினமும் எலுமிச்சை பழத்தை மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும். காய்ந்த பழத்தை கால்மிதி படாத இடமாக பார்த்து போட வேண்டும்.