சில தோஷங்களும் அதனை போக்கும் வழிகளும்...!!

ஒவ்வொரு பிரச்சனைக்கும் எளிய பரிகாரங்களை நம் முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளனர். அவற்றை முறையாக நம்பிக்கையுடன் செய்து வந்தால் இறைவனின்  கருணையினாலும் பிரச்சனைகள் தீர்ந்து இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும்.

நீண்ட நாட்களாக திருமண ஆகாமல் இருப்பவர்கள் ‎இரண்டு‬ சர்ப்பங்கள் இணைந்ததுபோல் இருக்கும் நாகராஜா சிலைக்கு, வெள்ளிக்கிழமை காலை 10:30 மணி முதல் 12:00 வரை இராகு காலத்தில், மஞ்சள் குங்குமம் வைத்து, செவ்வரளிப் பூ சாற்றி, அபிசேகம் செய்து, நெய்தீபம் ஏற்றிவர விரைவில் திருமணம் நடக்கும்.
 
குடும்பத்தில் திடீரென நோய்வாய் படுதல், பணம் கைதங்காமல் இருப்பது, குழந்தைகள் படிப்பில் கவனமின்மை என அல்லல்பட்டால் ஒரு மஞ்சள் கயிற்றில் கரித்துண்டு 9 எண்ணிக்கையில் பச்சைமிளகாய், எலுமிச்சையை கோர்த்து வாசலில் கட்டி விடவும். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பழசை எடுத்துவிட்டு புதுசு  கட்டவேண்டும். இப்படி செய்தால் கண்ணேறு நீங்கி குடும்பம் நிம்மதி பெறும்.
 
கழுத்தை நெரிக்கும் கடன் தொல்லைகளுக்கு ஸ்ரீயோக நரசிம்மரையும், மற்ற கடன் தொல்லைகளுக்கு ஸ்ரீலட்சுமி நரசிம்மரையும்வழிபட்டு வந்தால் விரைவில் கடன்  அடையும்.
 
‎ஸ்ரீநரசிம்மரின்‬ எந்த திருக்கோலத்தை தரிசித்தாலும் கடன் தொல்லைகள், பில்லி, சூனியம், ஏவல், திருஷ்டி ,திருமண தடை விலகி நன்மை பெறலாம்.
 
அம்மன் ‎ஆலய‬த்தில் உள்ள திரி சூலத்தில் குங்குமம் இட்டு, எலுமிச்சை பழம் குத்தி வழிபட, திருஷ்டி, செய்வினை தோஷம் நீங்கும். ‪
 
‎வெள்ளெருக்கு‬ விநாயகரை வீட்டு அறைகளில் கைக்கு எட்டாத உயரத்தில் வைத்து வழிபட்டால் பூதகண சேஷ்டைகள் இருந்தால் நீங்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்