தேய்பிறை அஷ்டமியில் பைரவரை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்!!

பைரவர் அருள் இதற்கு சிறந்த முறையில் வழிகாட்டுகிறது. ஸ்ரீ ஸ்வர்ண ஆகர்ஷன பைரவர், வாழ்வின் மிக முக்கிய தேவையான  ஸ்வர்ணங்களை அள்ளிதரும் ஒரு அற்புத சக்தி.
பைரவர் என்றால் பயத்தை நீக்குபவர், அடியார்களின் பாபத்தை நீக்குபவர்என்றும் பொருள் கூறப்படுகிறது. படைத்தல், காத்தல், அழித்தல் – அதாவது ஒடுக்குதல் ஆகிய முக்கிய இறையருள் தொழில்களைச் செய்து பல லட்சஉயிர்களையும் காப்பதால் அவருக்குத் திரிசூலம் அதிகார ஆயுதமாக அளிக்கப்பட்டது.

படைத்தல் தொழிலை உடுக்கையும், காத்தல் தொழிலை கையில் உள்ள கபாலமும், அழித்தல் தொழிலை உடலில்  பூசிய விபூதியும் குறிக்கும். இந்தக் கடவுளே ஆனந்த பைரவராக உலகைப் படைக்கிறார். பின்னர் காலபைரவராக உலகை காக்கின்றார்.
 
பக்தர்களுக்கு உடனடி நிவாரணம் தரும் கடவுளாக பைரவர்விளங்குகின்றார். அதனால் தான் பைரவர் வழிபாட்டின் பலனைக் குறிக்க இந்தப் பழமொழி வழங்கப்பட்டது. நவக்கிரகங்களின் வக்கிரத்தால் பலர் வாழ்க்கையில் மிகுந்த துன்பத்தை அடைகிறார்கள். அதுவே அவர்களின் நல்ல  பார்வையால் சிலர் எதிர்பாராத நன்மைகளையும், புகழையும் அடைகிறார்கள். நன்மைகள் கிடைத்தால் சரி, ஆனால், வரும் துன்பங்களிலிருந்து  மீள என்ன வழி என்று கேட்டால் பைரவர் பூசை செய்யுங்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்