ஆலய வழிபாட்டுக்கு செல்ல இயலாதவர்கள் கூட தூரத்தில் இருந்து போபுரத்தை வணங்கி செல்வதை காணமுடியும். கோபுங்களை ஸ்தூல லிங்கமாகவும், இறைவனின் பாதங்களாகவும் பாவித்தனர். கோபுர வழிபாடு முழுமையான ஆலய வழிபாட்டுக்கு இணையானது என்ற நம்பிக்கை காலகாலமாய் இருந்து வருகிறது.
பாதங்கள் - முன்கோபுரம், முழங்கால் - ஆஸ்தான மண்டபம், துடை - நிருத்த மண்டபம், தொப்புள் - பலி பீடம், மார்பு - மகாமண்டபம் ( நடராஜர்), கழுத்து - அர்த்த மண்டபம் (நந்தி), சிரம் - கர்ப்பகிரகம், வலது செவி - தக்ஷிணா மூர்த்தி, இடது செவி - சண்டேஸ்வரர்,
வாய் - ஸ்நபன மண்டப வாசல், மூக்கு - ஸ்நபன மண்டபம், புருவ மத்தி - லிங்கம், தலை உச்சி - விமானம்.