காகத்திற்கு தினமும் காலையில் சாதம் வைக்கும்போது, உங்கள் வாழ்வில் தீராத கடன் தொல்லைகள், புத்திர சந்தான பாக்கியம் போன்ற மிக முக்கியமான பலன்களையும் தடையின்றி நிறைவேற்றுவதில் மிக முக்கிய பங்கு வகிப்பது உங்கள் முன்னோர் வழிபாடுதான்.
எமனும் சனியும் சகோதரர்கள் ஆவார்கள் அதனால் காக்கைக்கு உணவிடுவதால் இருவரும் ஒரே சமயத்தில் திருப்தி அடைவார்களாம். தந்திரமான குணம் கொண்ட காகம் யாராவது விருந்தினர் வருவதாக இருந்தாலும் நல்ல செய்திகள் வருவதாக இருந்தாலும் முன் கூட்டியே காகம் நம் வீட்டின் முன் கா..கா.. என்று பலமுறை குரல் கொடுக்கும். இந்த பழக்கம் இன்றும் உண்டு.
காலையில் நாம் எழுவதற்கு முன் காக்கையின் சத்தம் கேட்டால் நினைத்த காரியம் வெற்றி பெறும். நமக்கு அருகில் அல்லது வீட்டின் வாசலை நோக்கி கரைந்தால் நல்ல பலன் உண்டு. வீடு தேடி காகங்கள் வந்து கரைந்தால் அதற்கு உடனே உணவிட வேண்டும். எனவே காக்கை வழிபாடு செய்வதால் சனி பகவான் எமன் மற்றும் முன்னோர்களின் ஆசீர்வாதத்தினைப் பெற்றுத் தரும்.