பஞ்சமி திதி விசேஷமானது. அதிலும், தேய்பிறையில் வரும் பஞ்சமி திதி கூடுதல் விசேஷம். தேய்பிறையில் வரும் பஞ்சமி திதியில் விரதம் இருந்து நாக தேவதைகளையும், ராகு பகவானையும் வழிபட்டு வந்தால் ராகு தோஷம், நாக தோஷம் உள்ளிட்ட தோஷங்கள் விலகும்.
ஜோதிட சாஸ்திர படி ராகுவும் கேதுவும் மற்ற கிரகங்களில் இருந்து வேறுபட்டு, நிழல் கிரகங்கள் என்று கூறப்படுகிறது. ஒருவர் தன்னுடைய முன் ஜென்மத்தில் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்றவாறு இந்த இரு கிரகங்களும் ஒருவரது ஜாதகத்தில் அமர்கின்றன.
பஞ்சமி திதியில் விரதம் இருந்து நாக தேவதைகளையும் ராகு பகவானையும் வழிபட்டு ராகு காயத்ரி மந்திரத்தை 108 முறை ஜபித்தால் ராகு தோஷம், நாக தோஷம் உள்ளிட்ட தோஷங்கள் விலகும். அதோடு ராகு பகவானின் பரிபூரண அருளை பெற்று ராஜ வாழ்க்கை வாழ முடியும்.