துளசி மாடம் எங்கு உங்களின் வீட்டில் வைத்திருக்கிறீர்களோ அங்கு சென்று மாடத்தின் கீழ் விளக்கு ஒன்றை ஏற்றி வைக்க வேண்டும். துளசி மாடத்தின் பூஜைக்கு பஞ்ச பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து கொள்ளவும். அடுத்ததாக பூஜைக்கு செய்யும் பூஜை மணி, அதன் பிறகு கற்கண்டு, இல்லையென்றால் திராட்சை பழ வகைகளை பூஜைக்கு வைத்து கொள்ளலாம்.
விளக்கு ஏற்றிய பிறகு துளசி மாடத்திற்கு சூடம் ஏற்றி பத்தி, சாம்பிராணி போன்றவை காட்ட வேண்டும். சாம்பிராணி காட்டிய பிறகு பஞ்ச பாத்திரத்தில் வைத்திருந்த தண்ணீரை நெய்வேதனம் செய்த பிறகு மீதமுள்ள தண்ணீரை எல்லாவற்றையும் அந்த துளசி மாடத்திற்கு ஊற்றவேண்டும்.