தூக்கத்திலிருந்து கண் விழிக்கும் போது கண்ணாடியில், உங்கள் முகத்தையே பார்த்தால் லட்சுமி கடாட்சம் ஏற்படுமாம். உங்களின் பாசத்திற்குரியவர்களான அம்மா, மனைவி, குழந்தைகள் ஆகியோரின் முகத்தில் விழிப்பதும் நல்லதாம்.
காலையில் எழுந்ததும் கண் விழித்து முதன் முதலில் சூரியனை தரிசிப்பது சிறந்தது. மேலும் தாமரைப் பூ, சந்தனம், கடல் மற்றும் அழகான இயற்கைக் காட்சிகளை காலை கண் விழித்ததும் பார்ப்பதும் நல்லதாம். இது உடலுக்கும், மனதிற்கும் உற்சாகம் தந்து அன்றைய தினத்தை சிறப்பானதாக மாற்றும்.
மேலும் வயல், சிவலிங்கம், கோயிலின் ராஜகோபுரம் பசுமாடு, நறுமணம் வீசும் மலர்கள் நிறைந்த பூந்தோட்டம் ஆகியவற்றை காலையில் எழுந்ததும் கண் விழித்து பார்ப்பது மனதிற்கு உற்சாகத்தை தந்து அன்றைய தினத்தை இனிமையான நாளாக ஆக்குகிறது.