குரு பகவான் அமைந்துள்ள புகழ் பெற்ற தலங்களில் சில !!

வியாழன், 2 ஜூன் 2022 (18:20 IST)
நவகிரகங்களில் பூரண சுப பலம் பெற்றவர் குருபகவான். தேவர்களுக்கு குருவான இவரை பிரகஸ்பதி என்றும், வியாழ பகவான் என்றும் அழைப்பர்.


சிவ வழிபாடு நீங்கலாக, கிரக நிலைகளால் ஏற்படும் தீய விளைவுகளில் இருந்து விடுபட வேண்டி குரு பகவானை (வியாழன்) வழிபாடு செய்வதும் அவசியம்.

ஜாதகத்தில் குரு தோஷம் இருப்பவர்கள், குருபகவானுக்கு உரிய பரிகாரங்களைச் செய்து வழிபட்டால், வாழ்வில் சுபிட்சம் உண்டாகும்.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே அமைந்துள்ளது குருவித்துறை. குருவின் பெயராலேயே அமைந்த தலம்; குரு பகவான் திருமாலின் அருள்பெற்ற தலம் இது.

குரு வீற்றிருந்த துறை என்பதால், குருவிருந்த துறை என்ற பெயர் ஏற்பட்டு, அந்தப் பெயரே குருவித்துறை என்று ஊர்ப் பெயராக வழங்குகிறது.

பதவி உயர்வு தரும் திட்டை குரு பகவான். தஞ்சாவூர் அருகே அமைந்துள்ள திட்டை திருக்கோயிலில் அருள்பாலிக்கிறார் குரு பகவான்.
தேவகுருவான பிரகஸ்பதி, கிரகங்களில் ஒருவராக பதவி உயர்வு பெற்ற தலம் திட்டை. இவரை வழிபட்டால் பதவி உயர்வு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

குரு மூல மந்திர ஜபம்:

"ஓம் ஜ்ரம் ஜ்ரீம் ஜ்ரௌம் ஷக் குரவே நமஹ",

குரு ஸ்தோத்திரம்:

தேவானாம் ச ரிஷஷீணாம் ச
குரும் காஞ்சன ஸந்நிபம்!
புத்தி பூதம் த்ரிலோகேசம்
தம் நமமாமி ப்ருஹஸ்பதிம் !!

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்