வெற்றிலைபாக்கில் சுண்ணாம்பு இருக்கக் கூடாது. நமக்கு இடப்பக்கமாவும், சுவாமிக்கு நமக்கு மிஞ்சியை சக்தியை இறை என்றுணர்ந்து, இறையின்பால் நம்பிக்கை வைப்பது எப்போதும் நல்லது.
பூஜைக்கு வைக்கப்படும் வெற்றிலைக்கு நுனியும், வாழைப்பழத்திற்கு காம்பும் அவசியம் இருக்க வேண்டும். வெற்றிலைபாக்கில் சுண்ணாம்பு இருக்கக் கூடாது. நமக்கு இடப்பக்கமாவும், சுவாமிக்கு வலப்பக்கமாவும் வெற்றிலைக்காம்பு இருக்க வேண்டும்.
தேங்காயை உடைத்தப்பின், முக்கண் இருக்கும் தேங்காயின் மேல்பாகம் நமக்கு இடைக்கைபக்கம் கடவுளுக்கு வலப்பக்கமாக இருக்க வேண்டும். தேங்காயின் கீழ்ப்பாகம் நமக்கு வலப்பக்கமும் கடவுளுக்கு இடப்பக்கமும் இருக்க வேண்டும்.
வினாயகரை துளசியால் அர்ச்சிக்கக்கூடாது. அதுப்போல் வைணவ கடவுளுக்கு அட்சதையும், சிவனுக்கு தாழம்பூவும், திருமகளுக்கு தும்பை பூவும், சரஸ்வதிக்கு பவளமல்லியும், அம்பிகைக்கு அருகம்புல்லும் பூஜைக்கு ஏற்றதல்ல.
வில்வம், கொன்றை, தும்பை, வெள்ளேருக்கு, ஊமத்தை சிவனுக்கு உரியது. காளியம்மன், துர்கை, முருகனுக்கு அரளி பூக்களும், அருகம்புல், மல்லி, சாமந்தி, நீலப்பூ, ரோஜா, பன்னீர் ரோஜா, சங்குப்பூ, தாமரை, மரிகொழுந்து, சம்பங்கி, துளசி, விருச்சிப்பூ பூஜைக்கு ஏற்றது.