இந்த முக்கிய நாட்களில் கட்டாயம் தவிர்க்கவேண்டிய அந்த விஷயங்கள் என்ன....?

செவ்வாய், வெள்ளிக்கிழமை நாட்களில் வாரத்தில் இரண்டு நாள் அல்லது ஒரு நாளாவது உங்க வீட்டு வாசற்படிக்கு மஞ்சள் குங்குமம் பூசுங்கள். இதனால  வீட்டுக்குள் தீய சக்தியும் வராது, விஷப்பூச்சிகள் எதுவுமே வராது.


அமாவாசை, பவுர்ணமி மாதப்பிறப்பு ஜன்ம நட்சத்திரம் இந்த நாட்களில் எல்லாம் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க கூடாது. பெண்கள் பூசணிக்காய், தேங்காய் எல்லாம் உடைக்கக்கூடாது. முக்கியமாக கர்ப்பிணி பெண்கள் தேங்காய் உடைக்கும் இடத்திலும் பூசணிக்காய் உடைக்கும் இடத்திலும் இருக்கவே கூடாது.
 
சனி பகவானுக்கு வீட்டில் விளக்கு ஏற்றக்கூடாது. நம்ம வீட்டு பூஜை அறையில் கடவுளை வணங்கும் பொழுது முடிந்த அளவிற்கு தரையில் அமர்ந்தபடியே  வணங்குவது ரொம்பவே நல்லது.
 
விளக்கேற்றும் பொழுது தூங்க கூடாது. அது மட்டுமில்லை நம் வீட்டில் யாராவது தூங்கி கொண்டு இருந்தார்கள் என்றால் அந்த நேரத்தில் நாம் விளக்கேற்றவே கூடாது. அதிகாலையிலும், மாலையிலும் சரி யாருமே தூங்கக்கூடாது விளக்கு ஏற்றும் பொழுது. தூங்கி எழுந்த பிறகு விளக்கு ஏற்றினால் போதும். 
 
பூஜைக்கு தேங்காய் உடைக்கும் பொழுது அது இரண்டு துண்டாக உடையாமல் மூன்று, நான்கு துண்டுகளாக உடைந்தால், அந்த தேங்காய் சாமிக்கு நிவேதனமாக  வைக்க கூடாது.
 
பூஜைக்கு பயன்படுத்திய வாடிய பூக்களை ஒரு தட்டில் அல்லது ஒரு கூடையில் போட்டு வைக்க வேண்டும். இந்த வாடிய பூக்களை அடுத்தவர்களின் கால்பட்ட இடத்திலேயோ அல்லது குப்பையிலும் போடாமல் ஓடுகின்ற தண்ணீரில் போடுவது ரொம்ப நல்லது.
 
செவ்வாய்க்கிழமையும் ,வெள்ளிக்கிழமையும் வீட்டில் வெண்ணெய் உருக்கக் கூடாது. இதற்கு என்ன காரணம் என்றால் செவ்வாய்க் கிழமை மற்றும் வெள்ளிக் கிழமையும் லட்சுமிக்கு உகந்தநாள். வெண்ணெயில் மகாலட்சுமி இருப்பதால் இந்த இரண்டு நாட்களிலும் வெண்ணெய் உருக்கக் கூடாது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்