கண் திருஷ்டியின் மூலம் வரும் பிரச்சனையை தீர்க்கும் எளிய பரிகாரம்...!!
சிலருக்கு கண் திருஷ்டியின் மூலம் தீராத பல பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கும். எப்படிப்பட்ட பிரச்சனைகளையும் ஒரே முறையில் நீக்கக்கூடிய திருஷ்டி பரிகாரம் எவ்வாறு செய்வது என்பதை பார்ப்போம்.
திருஷ்டியை கழிக்க தேவையான பொருட்கள்: ஒரு எலுமிச்சை பழம், முகத்தில் பூசிக் கொள்ளும் மஞ்சள்தூள், கல் உப்பு, வால் மிளகு தூள். அதாவது சாதாரண மிளகு கிடையாது. வால் மிளகை வாங்கி நீங்களே பொடிசெய்து வைத்துக் கொள்வது நல்லது. ஆனால் கட்டாயம் இந்த வால்மிளகு தூள் இருக்க வேண்டும்.
முதலில் எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டிக் கொள்ள வேண்டும். இரண்டு பாகங்களாக பிரிய வேண்டுமே தவிர, இரண்டு துண்டுகளாக பிரித்து விடக் கூடாது. எலுமிச்சை பழத்தின் ஒரு முனையை மட்டும் வெட்டாமல் ஒட்டி இருக்கும்படி வைத்துக் கொள்ள வேண்டும்.
எலுமிச்சை பழத்தின் உள் பகுதியில் மேற்குறிப்பிட்ட பொருட்களை எல்லாம் தடவும் அளவிற்கு, இரண்டு பாகங்களாக பிரிக்க வேண்டும். லேசாக வெட்டிய எலுமிச்சை பழத்தின் உள் பகுதியில் உள்ள இரண்டு பக்கத்திலும், முதலில் மஞ்சள் பொடியை நன்றாக தடவிக் கொள்ளுங்கள். அதன் பின்பு வால் மிளகு தூளை இரு பக்கமும் நன்றாக தடவிக் கொள்ளுங்கள். ஒரு சிட்டிகை கல் உப்பை எடுத்து நடுவே வைத்து, எலுமிச்சை பழத்தை உங்கள் உள்ளங்கைகளில் வைத்து கொள்ள வேண்டும்.
வீட்டில் உள்ளவர்கள் அனைவரையும் ஒன்றாக கிழக்குப்பக்கம் பார்த்தவாறு உட்காரவைத்து, ஒன்பது முறை எல்லோரையும் சேர்த்து சுற்றியபடி திருஷ்டி கழிக்க வேண்டும். அதன் பின்பு கையிலிருக்கும் எலுமிச்சை பழத்தை ஒரு பேப்பரில் வைத்து வெளியே தெரியாமல், மடித்து கால் படாத இடத்தில் கொண்டுபோய் தூர வீசி விடுங்கள். இது மிகவும் ஒரு நல்ல வழியாக சாஸ்திர குறிப்புகளில் சொல்லப்பட்டுள்ளது.
இந்த பரிகாரத்தை அமாவாசை, ஞாயிற்றுக்கிழமை, செவ்வாய்க்கிழமை தினங்களில் செய்யலாம். மாலை 6 மணிக்கு மேல், முடிந்தால் இரவு 9 மணிக்கு செய்தாலும் நல்ல பலனை தரும்.