வீட்டில் பணபற்றாக் குறையை தீர்க்க எளிய பரிகாரங்கள்!

நம் அன்றாட வாழ்வில் நாம் கடைபிடிக்கும் சில விஷயங்களை மாற்றிக்கொண்டாலே போதும், லட்சுமி தேவியின் அருள் பரிபூரணமாக  கிடைக்கும்.
காலையில் எழுந்ததும் முதன்முதலில் அவரவர் உள்ளங்கைகளையே பார்க்க வேண்டும். ஏனென்றால் உள்ளங்கையில் திருமகள் வாழ்கிறாள், திருமகளின் திருவருளால் கடுமையாக உழைத்தால் செல்வம் சேரும் என்பதே இதன் பொருள்.
 
தேய்பிறை அஷ்டமியன்று வரும் இராகு காலத்தில் சொர்ண ஆபர்ஷண பைரவரை தீபம் ஏற்றி வழிபட்டால் செல்வ வளம் பெருகும்.
 
ஒவ்வொரு வெள்ளியிலும் அருகிலிருக்கும் லட்சுமிதேவி சன்னிதி இருக்கும் கோயிலுக்கு சென்று மல்லிப்பூ மற்றும் வில்வ இலைகளால் திருமகளை அர்ச்சித்து வணங்கினால் இலட்சுமி கடாட்சம் கிடைக்கும்.
 
வீட்டில் எப்பொழுதும் தீப ஒளி ஒளிர்ந்துகொண்டிருந்தால் அவ்வீட்டில் செல்வத்திற்கு குறைவிருக்காது, தீப ஒளி, யானை, பூரண கும்பம்,  பத்மாவதி தாயார் அமர்ந்திருக்கும் செந்தாமரை ஆகியவை இருக்கும் இடத்தில் செல்வத்திற்கு குறைவிருக்காது.
 
வீட்டில் குபேரனின் படத்தை தனியாக வைக்காமல் லட்சுமி குபேரர் படத்தை வைத்து பூஜிக்க வேண்டும். குபேரரை வணங்கும் முன்  மகாலட்சுமியை தான் வணங்க வேண்டும் இவ்வாறு செய்தால் செல்வம் நிலைத்திருக்கும். செல்வ வளம் பெருக தினம் மகாலட்சுமி  மந்திரத்தை 108 முறை ஜபித்து வந்தால் மகாலட்சுமி கடாக்ஷம் பெருகும்
 
மகாலட்சுமி மந்திரம்:
 
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம்
மகாலக்ஷ்மி மகாலக்ஷ்மி
யேகி யேகி சர்வ சௌபாக்யமே தேகி ஸ்வாஹா
 
தினமும் காலை குளித்து முடித்து, வீட்டு பூஜை அறையில் குத்துவிளக்கை நெய்விட்டு ஏற்றி, வீடு முழுவதும் சாம்பிராணி தூபம் போட்டு, பூஜை அறையில் கிழக்கு நோக்கி அமர்ந்து மனதை ஒருநிலைப்படுத்தி 108 முறை மகாலட்சுமி மந்திரத்தை தியானித்து வரவேண்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்