தெய்வீகத் தன்மை வாய்ந்த நேர்மறை சக்திகள் நம் வீட்டுக்குள் நுழைந்து, நிரந்தரமாக தங்கி, நிறைவான வாழ்க்கை வாழ உதவும் சில எளிய குறிப்புகளை பற்றி பார்ப்போம்.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தினத்தன்றும் வீட்டு வாசற்படியை சுத்தம் செய்து, அந்த வாசற்படியில் மஞ்சள் பூசி, குங்குமம் இட்டு வருவதை வழக்கமாகக் கொள்ளவேண்டும். இப்படி செய்வதால் செல்வ மகளான லட்சுமி தேவி, அந்த வீட்டிற்குள் நிரந்தரமாக தங்கி, அந்த வீட்டில் நிறைவான செல்வம் இருக்கும்படி வழிவகை செய்வாள்.
வீட்டின் முன்பாக நிலை வாசற் படிக்கு மேல் ஒரு படிகாரம் கல்லை கருப்புநிற கயிற்றில் கட்டி, தொங்க விட வேண்டும். இப்படிச் செய்வதால் அந்த வீட்டிற்குள் நுழைய முயல்கின்ற எதிர்மறை ஆற்றல்களை அந்தப்படிகாரக்கல் ஈர்த்துக்கொண்டு நாம் வாழும் வீட்டை தீயசக்திகளிடமிருந்து பாதுகாக்கும்.
வீட்டின் முன்பாக விநாயகர் படம் அல்லது விநாயகர் சிலை இருப்பது அந்த வீட்டிற்குள் எதிர்மறை ஆற்றல்கள் நுழையாமல் காக்கிறது. அதிலும் அந்த விநாயகர் சிலை வெள்ளருக்கு விநாயகர் சிலையாக இருப்பது நல்லது. அதற்கு மலர் சாற்றி, தீப தூபம் காட்டி வருவதால் அந்த வீட்டில் வசிப்பவர்களின் வாழ்வில் நன்மையான பலன்கள் அதிகம் ஏற்படும்.