நரசிம்ம மூர்த்திக்கும் உகந்ததா பிரதோஷ நேரம்...?

மகாவிஷ்ணுவின் அவதாரங்களில், பிரதோஷத்துக்கு தொடர்பு கொண்ட அவதாரமாகத் திகழ்வது ஸ்ரீநரசிம்ம அவதாரம்.


இருக்கும் அவதாரங்களில், நரசிம்மரின் அவதாரம்தான், குறைந்த காலகட்டத்திலானது. சொல்லப்போனால், குறைந்த நேரத்தில் அவதரித்தது என விவரிக்கிறது புராணம்.
 
காலையும் இல்லாமல், இரவும் இல்லாமல் இருக்கும் நேரத்தில்தான் நரசிம்ம அவதாரம் நிகழ்ந்தது. வீட்டுக்கு உள்ளேயும் இல்லாமல், வெளியேயும் இல்லாமல்  வாசலில் நிகழ்ந்தது நரசிம்ம அவதாரம். 
 
மனித உருவாகவும் இல்லாமல், மிருக உருவாகவும் இல்லாமல், மனித உடலும் சிங்க முகமும் கொண்டு நரசிம்ம அவதாரம் நிகழ்ந்தது என்கிறது புராணம். அப்படி சில மணித்துளிகளில் நிகழ்ந்த அவதாரம், ஒரு பிரதோஷத்தில், பிரதோஷ வேளையில் அமைந்தது என்கிறது நரசிம்ம அவதாரம். 
 
பிரதோஷம் என்பதும் பிரதோஷ வேளை என்பதும் சிவனுக்கு உரிய முக்கியமான பூஜைக்கு உரிய நாள் என்பது போலவே, நரசிம்ம மூர்த்திக்கும் உகந்த  முக்கியமான நாள்.
 
பிரதோஷத்தின் போது சிவாலயங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது போல, வைஷ்ணவ திருத்தலங்களில் நரசிம்மருக்கும் பூஜைகள் நடைபெறும். நரசிம்மரை  பிரதோஷத்தன்று தரிசிப்பது மகத்தான பலன்களை தரும்.
 
புதன்கிழமை நரசிம்மருக்கு விசேஷம். புதன்கிழமை அன்று வரும் பிரதோஷம் என்பது இன்னும் மகத்துவம் மிக்க நாள். 7-ம் தேதி புதன்கிழமையும் பிரதோஷமும்  இணைந்திருக்கும் நாளில், அருகில் உள்ள வைஷ்ணவ தலத்துக்கும் செல்வோம். நரசிம்மரின் சந்நிதிக்குச் சென்று துளசி மாலை சார்த்தி வேண்டிக் கொள்வோம். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்