மயில் இறகை வீட்டின் முன்பகுதியில் சொருகி வைத்தால் எதிர்மறை ஆற்றலைத் தடுத்து நேர்மறை ஆற்றலை வழங்கும். காவடியில் மயில் இறகை வைப்பது வழக்கம். வீட்டில் மயில் இறகு, அருகம்புல். துளசி ஆகியவற்றை வைப்பதன் மூலம் வாஸ்து தோஷங்கள் அகலும் என்பது நம்பிக்கை. வீட்டின் வாஸ்து தோஷத்தை நீக்க எட்டு மயில் இறகைப் பயன்படுத்த வேண்டும்.
அந்த எட்டு மயில் இறகையும் ஒன்று சேர்த்து ஒரு வெள்ளை நிற கயிற்றினால் கட்டி, பூஜை அறையில் வைத்து ‘ஓம் சோமாய நமஹ’ என்ற மந்திரத்தை உச்சரித்து வர வேண்டும். மயில் இறகை வீட்டின் முன் வைப்பதால், வீட்டினுள் எதிர்மறை ஆற்றல்கள் நுழைவதைத் தடுப்பதோடு வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்களும் நீங்கும்.