சிலருக்கு திருமணம் கைகூடாமல் தள்ளிப்போனால், பங்குனி உத்திர நாளில் விரதம் இருந்து இறைவனை வழிபட்டால் வெகு சீக்கிரம் திருமணம் கைகூடும் என்பது ஐதீகம். அதோடு, மனதுக்கு பிடித்தவரை கரம் பிடிக்கவும் பங்குனி உத்திர விரதம் இருப்பது மிகுந்த பலனைக் கொடுக்கும்.
பங்குனி உத்திரம் அன்று பக்தா்கள் தங்கள் விரதம் முடிந்தவுடன் பால் பாயாசம் செய்து அருந்தி மகிழ்வா். முழுமையாக விரதங்களை கடைபிடிக்க முடியாதவா்கள், முழுமையாக உணவு சாப்பிடாமல், பழங்களை மட்டும் எடுத்துக் கொள்வா்.
தைப்பூசத் திருவிழாவில் பக்தா்கள் காவடி எடுப்பது போல், பங்குனி உத்திரம் அன்றும் பக்தா்கள் காவடி தூக்கி, முருகப் பெருமானின் ஆலயங்களுக்குச் செல்வா். உணவுப் பொருள்களால் அலங்காிக்கப்பட்ட காவடிகளைத் தூக்கிச் செல்வா்.
பங்குனி உத்திரம் 'கல்யாண விரதம்' என்று அழைக்கப்படு கிறது. 8 வகையான மகா விரதங்களில் கல்யாண விரதமும் ஒன்று என்று ஸ்கந்த புராணம் குறிப்பிடு கிறது. ஆகவே இந்த நல்ல நாளில் திருமணம் ஆகாத இளையோா் விரதம் இருந்து தமக்கு நல்ல வரன்கள் கிடைக்க வேண்டும் என்று சிவபெருமானையும், பாா்வதி தேவியாரையும் வேண்டுவது நல்ல பலன்களை பெற்றுத்தரும்.