மகாவிஷ்ணுவின் திருமார்பில் வீற்றிருக்கும் வரத்தை பெற்ற மகாலட்சுமி !!

வெள்ளி, 18 மார்ச் 2022 (18:44 IST)
செல்வத்தின் அதிபதியான ஸ்ரீமகாலட்சுமி அவதாரம் நிகழ்ந்ததும் பங்குனி உத்திர நன்னாளில் தான்.


காக்கும் கடவுள் ஸ்ரீமகாவிஷ்ணுவை நோக்கி கடுந்தவம் இருந்த ஸ்ரீமகாலட்சுமிக்கு, ஸ்ரீமகாவிஷ்ணு தன்னுடைய திருமார்பில் வீற்றிருக்கும் வரத்தை அளித்ததும் பங்குனி உத்திரத் திருநாளில் தான் என்கிறது வரலாற்று ஆதார நூலான விஷ்ணு புராணம்.

நம்முடைய செல்வ வளம் சிறக்க இந்நாளில் ஸ்ரீமகாலட்சமியை வேண்டி விரதம் இருந்தால் சகல செல்வ வளங்களும் நமக்கு கிட்டும்.  ஆண்டாள்-ரங்கமன்னார், நந்திதேவர்-சுயசை திருமணம் நடந்ததும் பங்குனி உத்திர நன்னாளில் தான்.

அது மட்டுமா, படைப்புக் கடவுளான பிரம்ம தேவர் தன்னுடைய நாவில் கல்விக் கடவுளான சரஸ்வதியை அமர்த்திக்கொண்டதும் பங்குனி உத்திரத் திருநாளில் தான்.

பிரம்மச்சாரிய கடவுளான ஸ்ரீசபரிமலை சாஸ்தாவான ஐயப்பன் அவதரித்ததும், பூரணா-புஷ்கலாவை மணம் செய்து கொண்டதும் இந்நன்னாளில் தான். அதேபோல் மன்மதன் ரதிதேவியை மணம் செய்து கொண்டதும் இந்த நாளில் தான்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்