வெண்பூசணிச்சாற்றை தொடர்ந்து அருந்தி வருவதன் மூலம் கிடைக்கும் பலன்கள் !!

புதன், 23 பிப்ரவரி 2022 (19:39 IST)
வெண்பூசணிக்காய் மூளையின் செயல்பாடுகளை தூண்டி மூளை நரன்புகளை பலப்படுத்துகிறது. இதன் மூலம் மன அழுத்தம் போன்றவற்றை குறைத்து ஆரோக்கியமான மனநிலையை அளிக்கிறது.


வெண்பூசணிச்சாறு ரத்தத்தை சுத்தப்படுத்தும் தன்மை கொண்டுள்ளதால், இதனை அருந்தி வரும் பொழுது தோல் அலர்ஜி, தோல் சுருக்கம் போன்ற தோல் தொடர்பான நோய்கள் படிப்படியாக குறைந்து வரும்.

பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் அதிக உதிரப்போக்கு வெள்ளைப்படுதல் போன்ற பிரச்சனைகளை வெண்பூசணிச்சாற்றை தொடர்ந்து அருந்தி வருவதன் மூலம் குணமாகும்.

வெண்பூசணிக்காய் சாறு எலும்பு நரம்புகளை வலுப்படுத்தி, உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. வெண்பூசணிச்சாற்றை தொடர்ந்து அருந்தி வருவதன் மூலம், ரத்த ஓட்டம் சீராகி, ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.

வெண்பூசணிக்காய், இதய ப;அவீனத்தை தடுக்கக்கூடியது. இதய நாளங்களில் ஏற்படும் அடைப்பை, படிப்படியாக குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

வெண்பூசணி சாறு சிறுநீரக கோளாறுகளை  குறைக்கக்கூடிய  ஆற்றல் கொண்டது. சிறுநீரகத்தில் உருவாகும் தொற்றுக்கள். சிறுநீருடன் கலந்து வரும் ரத்தப்போக்கு, மூலநோயால் வரும் ரத்தக் கசிவு போன்றவற்றிற்கு வெண்பூசணி சாற்றை தினமும் அரிந்தி வருவதன், மூலம் சிறந்த நிவாரணம் கிடைக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்