சிவலிங்க பூஜைக்கு ஏற்ற மகத்துவம் நிறைந்த நாகலிங்கப்பூ !!

சிவலிங்க பூஜைக்கு உதவும் பொருட்களில் நாகலிங்கப் பூவுக்கும் முக்கியப் பங்கு உண்டு. நாகலிங்கப் பூவுக்கு 21 ரிஷிகள் தங்களுடைய தவ ஆற்றல்களை அளித்துள்ளதாக புராணங்கள் தெரிவிக்கின்றன.

நாகலிங்கப் பூவைத் தொடவேண்டும் என்றால், சிவ பஞ்சாட்சரத்தை 1001 முறை சொல்லிய பின்னரே தொடவேண்டும். நாகலிங்கப் பூவை கையில் எடுத்தப் பின்னர், 21 பேருக்கு அன்னதானம் செய்ய வேண்டும். 
 
நாகலிங்கப் பூவை ஈசனுக்கு சாற்றி வழிபட்ட பிறகு, அது வாடியப் பின்னரும் கூட, நாம் குளித்து விட்டுத்தான் அதனை எடுக்க வேண்டும். வாடிய நாகலிங்கப்  பூவை எடுத்து ஓடும் ஆற்றில் போட்டு விட வேண்டும். அல்லது கடலில் போடவேண்டும். நாகலிங்கப் பூவையே சிவலிங்கமாக எண்ணி வீட்டில் தினமும் பூஜை  செய்யலாம்.
 
சிவலிங்கத்திற்கு சாற்றிய நாகலிங்கப் பூவை, பிரசாதமாக பெற்றுக்கொண்டு வீட்டிற்கு கொண்டு வரவேண்டும். நமது வீட்டுப் பூஜை அறையில் சுவாமி படத்தின்  முன்பாக அதனை வைத்துக்கொள்ள வேண்டும். நீண்டகாலமாக இருக்கும் நோய் தீரவோ அல்லது நீண்டகாலமாக இருக்கும் குறைபாடுகள் நீங்கிடவோ மனதார வேண்டிக் கொள்ள வேண்டும்.
 
நமது நோய் தீரும் வரை தினமும் வேண்டிக்கொண்டு சிவமந்திரங்கள் அல்லது தேவாரப் பாடல்கள் பாடி வழிபட வேண்டும். நமது வேண்டுதல்கள் நிறை வேறிய  பிறகு, நாகலிங்கப் பூவை ஓடும் நதி அல்லது கடலில் போடலாம். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்