சிவனையும் அவன் சக்தியையும் சேர்த்து வணங்குவதே சிவலிங்க வழிபாடு. கீழுள்ள ஆவுடை, சக்தி வடிவம். மேலுள்ள லிங்கம், சிவ வடிவம். சிவமும் சக்தியும் இணைந்ததே சிவலிங்க வடிவம்.
சிவலிங்கத்தை வழிபட்டால், அது சிவனையும் சக்தியையும் இணைத்து வழிபட்டாதாகப் பொருள். அம்மனை தனித்து வழிபடும் வழக்கம் பிற்காலத்தில் ஏற்பட்டுள்ளது. சிவமூர்த்தங்கள் இருபத்தைந்தும் சிவலிங்கத் திருமேனியில் இருந்தே தோன்றுகின்றன. முடிவில் அவை அனைத்தும் அதனுள் ஒடுங்குகின்றன.