ஒவ்வொரு நாளும் ஒரு கடை என அங்குள்ள அனைத்து கடைகளிலும் அவர் எண்ணெய்யை பெறுவதை வழக்கமாக கொண்டிருந்தார். கடைக்காரர்களுக்கு புண்ணியம் வந்து சேரவேண்டும் என்பதற்காக பாபா காசு கொடுத்து எண்ணெய் வாங்குவது கிடையாது. ஆனால் கடைக்காரர்கள், பாபாவின் நல்லெண்ணத்தை புரிந்துகொள்ளாமல் தவறான முடிவை எடுத்துவிட்டனர்.
சாய் பாபா நிகழ்த்திய அற்புதம்: ஒருநாள் அந்த கடைக்காரர்கள் அனைவரும் இனி பாபாவிற்கு எண்ணெய் கொடுக்க கூடாது என்று முடிவெடுத்தனர். அடுத்த நாள் வழக்கம் போல ஒரு கடையில் வந்து பாபா எண்ணெய் கேட்கிறார். ஆனால் அந்த கடைக்காரர் வழக்கத்திற்கு மாறாக எண்ணெய்யை தர மறுக்கிறார். அடுத்தடுத்த கடைகளிலும் பாபா எண்ணெய் கேட்கிறார். ஆனால் அனைத்து கடைக்காரர்களும் இல்லை என்ற ஒரே பதிலையே கூறுகின்றனர். பாபா சிரித்தபடியே மீண்டும் மசூதிக்கு திரும்புகிறார்.