யோகா, தியானம் போன்ற அமைதியான எந்த செயலும் மன அழுத்தத்தை வெளியேற்றுகின்றன. மன அழுத்தம் குறைந்தாலே தூக்கம், மன அமைதி, கோபம், தனிமை போன்ற பிரச்சனைகள் தீர்ந்து விடுகிறது.
தியானம் கற்கும் ஆற்றலையும், ஞாபக சக்தியையும் அதிகரிக்கச் செய்கிறது. தியானம் செய்வதால் படிப்பு,வேலை என்று எந்த நிலையிலும் நம் கவனம் சிதறாது.
உடல் வலி, தலைவலி போன்ற உடல் ரீதியான பிரச்சனைகள் நீங்குகிறது. தினமும் தியானம் செய்வதால் மனப் பதட்டம், பயம், மனச் சோர்வு, திடீர் மன அழுத்தம் போன்றவை குணமாகும். அதேபோல் இரத்தக் கொதிப்பு, மாரடைப்பு போன்ற பிரச்சனைகளும் வராது.