அனைத்து சுவாசம் சம்பந்தமான நோய்களை தீர்க்கும் திப்பிலி...!!

சனி, 8 ஜனவரி 2022 (10:39 IST)
திப்பிலி ரசாயனம் இருமல், சளிக்கு ஒரு சிறந்த மருந்து. இதனால் செய்யப்படும் தைலம் மூல நோய்களுக்கும், குடலில் வாயு சேர்ந்த நிலைகளிலும், வஸ்தி (எனிமா) செய்யவும் பயன்படுகிறது. 

சளி, ஜலதோஷம் போன்றவற்றால் தொண்டை கட்டிக்கொண்டு கரகரப்பான குரல் ஏற்படுகிறது. இதனால் சரியாக பேச முடியாமல் போகிறது. திப்பிலி பொடியை சிறிதளவு எடுத்து சாப்பிட்டு வந்தால் தொண்டை கட்டு நீங்குவதோடு குரல் வளமும் மேம்பட செய்கிறது.
 
திப்பிலியின் காய்களில் வெற்றிலை போன்ற காரத்தன்மை அடங்கியுள்ளதால் வாசனை இருக்கும். திப்பிலியை வறுத்துப் பொடியாக்கி அரை கிராம் தேனுடன் கலந்து இரண்டு வேளை சாப்பிட்டுவர இருமல், தொண்டை கமறல், வீக்கம், பசியின்மை, தாது இழப்பு குணமாகும். இரைப்பை, ஈரல் வலுப்பெறும்.
 
திப்பிலி 50 கிராம், கரிசலாங்கண்ணி இலை 25 கிராம் ஆகியவற்றை அரை லிட்டர் நீரில் போட்டுச் சுண்டக் காய்ச்சிய பின் நிற்கும் திப்பிலியையும் தழையையும் இள வறுப்பாய் வறுத்துப் பொடித்து, அதன் எடைக்குச் சமமாகப் பொரிப்பொடி சேர்த்து, அதே அளவு சர்க்கரை கூட்டி ஐந்து கிராம் அளவு இரண்டு வேளை தொடர்ந்து சாப்பிட்டுவர இருமல், களைப்பு நீங்கும்.
 
திப்பிலி 10 கிராம், தேற்றான் விதை ஐந்து கிராம் சேர்த்துப் பொடியாக்கிக் கழுநீரில் ஐந்து கிராம் போட்டு ஏழு நாளைக்குக் காலையில் குடித்துவர வெள்ளை, பெரும்பாடு நீங்கும்.
 
மலச்சிக்கல், ஒரே இடத்தில் தொடர்ந்து அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு மூலம், பவித்திரம் போன்றவை ஏற்பதுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகிறது. மூலம் ஏற்பட்டவர்கள் அது குணமாக திப்பிலி பயன்படுத்தி நிவாரணம் பெறலாம்.
 
திப்பிலி பொடி, கடுக்காய் பொடி சமஅளவாக எடுத்துத் தேன் விட்டுப் பிசைந்து இலந்தைப் பழ அளவு இரண்டு வேளை தொடர்ந்து மூன்று மாதங்களுக்குச் சாப்பிட்டுவர, இளைப்பு நோய் குணமாகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்