உங்களின் வீட்டு படுக்கை அறையில் கண்ணாடி இருக்கக்கூடது, மூன்றாம் மனிதனின் குறுக்கீடு இருக்கும், அல்லது குழந்தை வாய்பேசாமல்போகவும் வாய்ப்புண்டு. அப்படி இருந்தால் இரவில் மூடி வைத்து விடுங்கள்.
வீட்டு வாயிற்படி அருகே அல்லது வீட்டின் முன்புறத்தில் எப்பொழுதும் நீர் தேங்க விடக் கூடாது. இது உடல் சார்ந்த பாதிப்பு, நோய்களைத் தொடர்ந்து ஏற்படுத்தும். தவிர்க்க முடியாத பட்சத்தில் வீட்டின் வாசற்கதவில் மஞ்சளால் ஸ்வஸ்திக் வரையலாம். இது பாதிப்பை பெருமளவில் குறைக்கும்.
கோவில் கொடி, கொடிமரம், கோவில் கோபுரம் இவற்றின் நிழல் வீட்டின் மேல் படியக்கூடாது. தாந்த்ரீக நூல்கள் இது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வியாதிகளால் பாதிக்கப்பட்டுத் தொடர் சிகிச்சை பெற்றும் பலனளிக்காமல் கஷ்டப்படுவார்கள். இது ப்ருத்வி தோஷங்களில் ஒன்று.