1. அசிதாங்க பைரவர், 2. குரு பைரவர், 3.சண்ட பைரவர், 4. குரோத பைரவர், 5.கபால பைரவர், 6.உன்மத்த பைரவர், 7.பீஷ்ண பைரவர், 8.சம்ஹார பைரவர்.
சிவமூர்த்தங்களுள் ஒருவராக பைரவரைக் குறிப்பிட்டிருந்தாலும் இவர் வீற்றிருப்பது ‘பைரவ புவனம்’ என்று கூறப்படுகிறது. சிவலோகத்திலுள்ள சோதி மயமான இந்த கோட்டையில் எட்டு வாசல்களிலும் மகா பைரவர், உக்கிரபைரவர், கபால பைரவர், பீஷ்ண பைரவர், சாகர பைரவர் என்பவர்கள் காவல் செய்து கொண்டிருப்பதாக அபிதான சிந்தாமணி கூறுகிறது.
ஸ்ரீபைரவருக்கு சேத்திரபாலக மூர்த்தி என்றும் ஒரு பெயர் வழங்குகிறது. சேத்திரம் என்றால் பூமி. பாலகர் என்றால் காப்பவர். சேத்திரமாகிய உலகிற்கு ஊழிக்காலத்தில் நேர்ந்த துயரத்தை நீக்கி காத்தருளினமையால் சிவனுக்கு சேத்திரபாலக மூர்த்தி என்னும் பெயர் விளங்குவதாயிற்று என்று புராண வரலாறு தெரிவிக்கிறது. சேத்திரம் என்றால் கோயில். பாலகர் என்றால் காப்பவர். சேத்திரமாகிய கோவிலைக் காப்பவர் பைரவர் என்றும் சொல்வார்கள்.