சூரிய பகவான் பற்றிய சிறப்புக்களை தெரிந்துக்கொள்வோம் !!

செவ்வாய், 8 பிப்ரவரி 2022 (14:34 IST)
சூரிய பகவானுக்கு உரிய விரதங்களில் மிக முக்கியமானது ரத சப்தமி. அவரது பிறந்த தினத்தையே ரத சப்தமியாக கொண்டாடுகின்றனர்.


காசிப முனிவருக்கும், அவரது மனைவி அதிதி என்பவருக்கும் விசுவான் முதலான 12 சூரியர்கள் பிறந்தனர். அதிதி அன்னையின் புத்திரர்களானதால், பன்னிரு சூரியர்களையும் ‘ஆதித்தர்’ என்பார்கள்.

சூரியன் மேஷம் முதல் மீனம் வரையிலான பன்னிரண்டு ராசிகளுக்கும் செல்வார். அவர் ஒரு ராசியில் இருந்து அடுத்த ராசிக்கு செல்லும் சமயமே மாதப்பிறப்பு நிகழ்கிறது. சூரியன் சஞ்சரிக்கும் ராசியின் பெயரைக் கொண்டே அந்தந்த மாதங்களுக்கு பெயர்கள் வழங்கப்படுகின்றன.

சித்திரை மாதப்பிறப்பை சித்திரை விசு என்றும், உ ஐப்பசி மாதப்பிறப்பை ஐப்பசிவிசு என்றும் கூறுவர். சூரியன் ஒருவராக இருந்தாலும் 12 ராசிகளில் சஞ்சரிப்பதால் பன்னிரு சூரியர்களாக கொள்ளப்படுகிறார்.

சூரியன் ஏறிவரும் தேருக்கு ஒரு சக்கரம் உண்டு. அந்த தேரில் பச்சை வண்ணமுடைய ஏழு குதிரைகள் பூட்டப்பட்டு இழுக்கின்றன. இந்தக் குதிரைகளை ஓட்டுகிற ரத சாரதி அருணன். இவர் காலில்லாதவர். சூரியனின் ரதம் பொன்மயமானது. அந்த ரதத்துக்கு ஐந்து ஆரங்களும், மூன்று நாபிகளும் உண்டு. மூன்று நாபிகளும் மூன்று காலத்தை குறிக்கும். சூரிய சக்கரத்தில் உள்ள ஆறு கட்டைகளும் ஆறு ருதுக்களை குறிக்கின்றன.

சக்கரத்தின் மேல் பாகமும், கீழ்பாகமும் உத்திராயணம், தட்சிணாயத்தை குறிக்கின்றன. சூரியன் நான்கு பட்டணங்களையும் சுற்றிவந்து உதயம், மத்தியானம் அஸ்தமனம், அர்த்தராத்திரி என்ற காலங்களை உண்டாக்குகிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்