வீட்டின் தெற்கு திசையில் இருந்து பல்லி சத்தமிட்டால், அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத அதிஷ்டம் வந்தடையும், விரைவில் சுப காரியம் ஏற்படும் என்பதை குறிப்பதாகும்.
வீட்டின் தென்மேற்கு திசையில் இருந்து பல்லி சத்தமிட்டால், அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு நண்பர்களாலோ அல்லது உறவினர்களாலோ எதிர்பாராத நன்மை ஏற்படும் என்பதை குறிப்பதாகும். வீட்டின் வடக்கு திசையில் இருந்து பல்லி சத்தமிட்டால், அந்த வீட்டிற்கு விரைவில் சுபச்செய்தி வரும் என்று அர்த்தம்.
பக்கத்து மனியிலோ அல்லது பக்கத்து வீட்டிலோ உள்ள பல்லி தெற்கு திசையில் சத்தமிட்டால் அது நம் வீட்டில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத தோல்வி உண்டாகும் என்பதை குறிப்பதாகும். அதோடு தேவை இல்லாத விரய செலவு, நஷ்டம் போன்றவை ஏற்படும் என்பதை குறிப்பதாகும்.
வீட்டின் கிழக்கு திசையில் இருந்து பல்லி சத்தமிட்டால் அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு தேவை இல்லாத பயம் ஏற்படும் என்பதை குறிப்பதாக அர்த்தம். பழைய பஞ்சாங்கங்களில், 'பல்லி சொல்லுக்கு பலன்' என்று எழுதியிருக்கும். அதைப் பார்த்தால் முழுத் தகவலும் கிடைக்கும்.