அருள்மிகு ஸ்ரீ கரூர் மஹா மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழாவை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அலகு குத்தியும், தீ சட்டி எடுத்தும் பக்தர்கள் தங்களுடைய நேர்த்தி கடனை செலுத்தினர். ஆண்டு தோறும் கரூர் ஸ்ரீ மஹா மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா வெகுவிமர்சையாக நடைபெறும்.
இந்தாண்டு கடந்த 12 ம் தேதி கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்த அம்மன் நாள் தோறும் அம்மன் எதிரே நடப்பட்ட புனித கம்பத்திற்க்கு பக்தர்கள் புனித நீர் ஊற்றிஅம்மனைவழிப்பட்டுவருகின்றனர். அதோ போல் இரவு நேரங்களில் அம்மன் பல்வேறு வாகனத்தில் திருவீதி உலா நடைபெற்று வருகிறது. இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கடும் வெயிலில் நின்று கம்பத்துக்கு புனித நீர் ஊற்றியும், மா விளக்கு எடுத்தும் அம்மனை வழிபட்டனர். அதே போல் மாவிளக்கு, அக்னிசட்டி, அலகு குத்தியும், அமராவதி ஆற்றில் குழந்தைகளுக்கு முடி காணிக்கை கொடுத்து தங்களுடைய நேர்த்தி கடனை செலுத்தினர்.
விழாவில் முக்கிய நிகழ்வுகளான அலகு குத்துதல், அக்னி சட்டி எடுத்தது உள்ளிட்ட நிகழ்ச்சிகள், திங்கள்செவ்வாய், புதன் உள்ளிட்ட மூன்று நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இன்று இரவு பள்ளர் மாவிளக்கு என்று சொல்ல கூடிய நிகழ்வில் கரூர் பாலமாபுரத்திலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் பல்வேறு கடவுள் வேடமணிந்து ஊர்வலமாக ஆலயத்திற்கு வந்து அம்மனை தரிசனம் செய்வார்கள்.