குளித்தலை ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய திருத்தேரோட்டம் நிகழ்ச்சி

புதன், 22 மே 2019 (18:20 IST)
கரூர் அருகே குளித்தலை ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய திருத்தேரோட்டம் நிகழ்ச்சி மிகவும் விமர்சையாக நடைபெற்றது.
கரூர் மாவட்டம் குளித்தலை ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு கடந்த மே 5-ஆம் தேதி கம்பம் ஊன்றி தினந்தோறும்  சிறப்பான அலங்காரத்துடன் அம்மனை வடிவமைத்து வந்த நிலையில் கடந்த 19-ந் தேதி 52-வது பெரிய பால்குட பெருவிழா நிகழ்ச்சி  நடைபெற்றது. இதனை தொடர்ந்து பெரிய தேர்த்திருவிழா வீதி நிகழ்ச்சி மிகவும் விமர்சையாக நடைபெற்றது.
 
இந்நிகழ்ச்சியில் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்த தேரை வடம்பிடித்த பக்தர்கள் ஆரவாரத்துடன் கடும் வெயிலிலும் இழுத்து வந்து புறப்பட்ட இடத்திலேயே மாரியம்மன் சன்னதியில் முன் நிறுத்தினர்.

இதில் ஏராளமான பக்தர்கள் வடம்பிடித்து அம்மனை தரிசித்தனர். தேர்  திருமிழாவிற்கு வந்திருந்த பக்தர்களுக்கு தமிழ்நாடு இந்து திருக்கோவில் கூட்டமைப்பு மாநில செயலாளர் திரு. அருள்வேலன் தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டது. தேர் நிலைக்கு நின்ற பிறகு திருவிழா நடைபெறவுள்ளது.

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்