இந்த ஆலயத்தில் வந்து வணங்கினால் திருமணதடை,, குழந்தைபேறு, தொழில் வளர்ச்சி, பில்லி சூன்யம் உள்ளிட்ட தீர்வு காண்பதால் இந்த ஆலயத்திற்கு பக்தர்கள் நாள்தோறும் வந்து வழிபட்டு செல்கின்றனர். முதல் நாளான இன்று துவங்கி ஜெயந்தி விழா காலை 108 லிட்டர் பால், பன்னீர், சந்தனம், ஜவ்வாது, தேன், தயிர், திருமஞ்சனம் உள்ளிட்ட பல்வேறு திரவ்ய அபிஷேகம் நடைப்பெற்றுது. தொடர்ந்து சக்கரதால்வார்ருக்கு பக்தர்களால் வழங்கப்பட்ட மலர்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் சுவாமிக்கு சிறப்பு மஹா தீபாரதனை காட்டப்பட்டது.