லட்சுமிக்கு படைக்கப்படும் உணவுகள்: நவராத்திரியின் 4-வது நாள் தயிர் சாதமும் உளுந்துவடையும் வைத்து படைப்பர், லட்சுமிக்கு உகந்த உணவு என்பதால், மற்ற உணவுகளைவிட இது கட்டாயம் இடம் பெறுதல் வேண்டும். கூடுதலாக அவல் கேசரி, பால் பாயாசம், கற்கண்டு பொங்கல் போன்ற இனிப்பு வகைகளை வைத்து படைக்கவும் செய்யலாம். கற்கண்டு அல்லது கருப்பட்டி பொங்கலும்கூட செய்யலாம்.
5-வது நாள் தயிர் சாதம், பால்சாதம், சுண்டலை வைத்து படையல் இடுதல் வேண்டும். தயிர் சாதத்தினைவிட பால் சாதம் உகந்தவையாக இருக்கும். உளுந்துவடைக்கு பதிலாக கடலை பருப்பு வடையும் சிலர் செய்வர்.
6-வது நாள் தேங்காய்சாதம், தேங்காய் பால் பாயாசம் மற்றும் தேங்காய் எண்ணெயில் சுண்டலைத் தாளித்தல் என தேங்காய் சம்பந்தமான பொருட்கள் இடம்பெறும். லட்சுமிக்கு பழ வகைகள் கொண்டு படையல் இட்டால் கூடுதல் பலனைப் பெற முடியும்.