நவராத்திரி பூஜையின்போது சொல்லவேண்டிய ஸ்லோகங்கள்!!

நவராத்திரி பூஜை என்பது விசேஷமானது ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதம் வருகிறது நவராத்திரி ஒன்பது நாட்களும் அம்பிகையை வெவ்வேறு வடிவங்களில் வழிபட்டு பத்தாவது நாள் விஜயதசமியாக அம்பிகை அசுரனை அழிக்கும் நாளாக கொண்டாடப்படுகிறது.
ஒன்பது நாட்கள் நவராத்திரிக்கு கொலு வைத்து பூஜை செய்வது மிகுந்த சிறப்பை தரும். இந்த பூஜையால் நமக்குள் இருக்கும் நமக்குள் எழும் தீயசக்திகள், உணர்வுகளை சுட்டு பொசுக்குகிறாள் அம்பிகை. நவராத்திரி பூஜைகள் தொடர்ந்து செய்வதால் நமக்குள் இருக்கும் தீயவை  அழிக்கப்படுவதாகவும் நல்லவை தழைப்பதாகவும் தேவி மஹாத்மியம் கூறுகிறது.
 
நவராத்திரி அன்று சக்தியை வணங்கினால் எல்லா வரங்களும் கிட்டும் லட்சுமி கடாட்சம் கிட்டும் என நம்பிக்கை. 9 நாட்களும் நம்பிக்கையோடு வணங்கினால் வாழ்வில் வெற்றி நிச்சயம். அம்பிகையை வணங்கும்போது தினமும் ஒரு ஸ்லோகம் சொல்லி வணங்கினால்  சிறப்பு.
 
ஸ்லோகம்:
 
கிராஹுர் தேவீம் த்ருஹிண க்ருஹிணீ மாகமவிதோ
ஹரே: பத்நீம் பத்மாம் ஹரஸ ஹசரீ மத்ரித நயாம்!
துரீயா காபி த்வம் துரதிகம் நிஸ்ஸீம மஹிமா 
மஹாமாயா விச்வம் ப்ரமயஸி பரப்ரஹ்ம மஹிஷி!!
 
இதனுடைய பொருள், இறைவனோடு கலந்திருக்கும் சக்தியே! வேதங்களின் உட்பொருளை தெரிந்தவர்கள் உன்னை சரஸ்வதி என்றும், லட்சுமி என்றும், சிவனின் பத்தினியாகிய பார்வதி என்றும் பலவிதமாகக் கூறுகிறார்கள். மனதிற்கும் வாக்கிற்கும் அப்பாற்பட்டவள் நீ எல்லையற்ற  மகிமை கொண்டவள் நீ, மகாமாயாவாக இருந்து உலகை இயக்கச் செய்து பிரமிக்க வைப்பவளே! அருள்புரிவாயாக என்பதாகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்