நவராத்திரி என்பது முப்பெரும் தேவிகளான அலைமகள், கலைமகள், மலைமகள் ஆகியோருக்கு மூன்று நாட்கள் வீதம் விரதம் இருந்து வழிபடுவதாகும். நவராத்திரி என்பது உலக மக்களை காப்பதற்காக அம்பிகை தீய சக்திகளுடன் போரிட்டு வெற்றிபெறும் நாளாகும்.
நவராத்திரி விரதம் மிக முக்கியமான விரதங்களில் ஒன்றாகும். கன்னிப்பெண்களையும், 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளையும் இப்பூஜையில் முக்கியமாக கருதுவார்கள். நவராத்திரி பூஜை மிக முக்கியமான ஒன்றாக கருதப்பட்டு இன்றும் சிறப்பாக கோவில்கள் மற்றும் வீடுகளில் கொண்டாடப்பட்டு வருகிறது.