ஆஞ்சநேயர் கோவிலில் செந்தூரம் தருவது ஏன்...?

அனுமனை வழிபடக் கூடிய அனைத்து ஆலயங்களிலும் செந்தூரம் வழங்குவதைப் பார்க்கலாம். இதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.

அனுமனை வழிபடக் கூடிய அனைத்து ஆலயங்களிலும் செந்தூரப் பொட்டு வழங்குவதைப் பார்க்கலாம். இந்த செந்தூரப் போட்டு எதற்காக வழங்கப்படுகிறது  என்பதற்கு ராமாயணத்தில் ஒரு கதை இருக்கிறது.
 
ஒரு முறை சீதாதேவி தனது நெற்றியில் செந்தூரப் போட்டு வைத்திருந்தார். அதைப் பார்த்த அனுமன், தாயே! எதற்காக செந்தூரம் வைத்துள்ளீர்கள்? என்றார்.  சீதையோ, தன் கணவரான ஸ்ரீராமர் நீண்ட காலம் ஆரோக்கியத்துடன் வாழவேண்டும் என்பதற்காக செந்தூரம் வைத்திருப்பதாக கூறினார்.
 
இதைக் கேட்ட அனுமன், உடனடியாகச் சென்று தன் உடல் முழுவதும் செந்தூரத்தை பூசிக் கொண்டார். ராமர் நலமுடன் இருக்க வேண்டும் என்ற ஆவல் அனைவருக்குமே உண்டு. ஆனால் அந்த எண்ணம் அனுமனிடம் எல்லை கடந்ததாக இருந்தது. அதனால்தான் அவர் தன் உடல் முழுவதிலும் செந்திரத்தைப் பூசிக்  கொண்டார்.
 
செந்தூரத் திலகத்தை ஆண்கள் இட்டுக் கொண்டால் செல்வம் பெருகும்.பெண்கள் இட்டுக் கொண்டால் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும். செந்தூரம் மிகவும் மருத்துவகுணம் உடையது. தீராத நோய்களையும் தீர்க்கவல்லது. ஆஞ்சநேயர் கோவிலில் வழங்கப்படும் செந்தூரம் குங்குமத்தையும், வெண்ணைய்யையும் கலந்து  செய்வது ஆகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்