சஷ்டி விரதத்தை கடைப்பிடிப்பது எப்படி அதன் பலன்கள் என்ன...?

வியாழன், 7 ஏப்ரல் 2022 (10:25 IST)
சஷ்டி தினத்தன்று அதிகாலையில் எழுந்து, குளித்து முடித்து விட்டு பூஜையறையில் முருகன் படத்திற்கு முன்பு தீபமேற்றி, தூபங்கள் காட்டி, பால், பழம் நிவேதனம் வைக்க வேண்டும்.


காலையிலிருந்து உணவேதும் அருந்தாமல் பூஜையறையில் அமர்ந்து 'கந்த சஷ்டி கவசத்தையோ" வேறு ஏதேனும் முருகனின் மந்திரங்களையோ நாள் முழுவதுமோ அல்லது உங்களால் முடிந்த வரை ஜெபிக்க வேண்டும். வேலை காரணமாக வெளியில் செல்பவர்கள், ஓம் முருகா என்று மனதிற்குள் ஜெபித்தவாறு தங்கள் வேலையில் ஈடுபடலாம்.

காலையும், மாலையும் கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்வதும் ஸ்கந்த குரு கவசம் கேட்பதும் இல்லத்தில் நிம்மதியையும், சந்தோஷத்தையும், உற்சாகத்தையும் மனத்தெளிவையும் தந்தருளும்.

இந்த நாளில், அருகில் உள்ள முருகப்பெருமான் கோயிலுக்குச் சென்று தரிசிக்க வேண்டும்;. முருகக்கடவுளுக்கு அபிஷேகப் பொருட்கள் வழங்கி தரிசிப்பது இன்னும் விசேஷம். செவ்வரளி மலர்கள் சூட்டி மனதார வேண்டிக்கொண்டால்... வேண்டியதையெல்லாம் தந்தருளுவான் வேலவன்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்