புத்திக்கூர்மைக்கு வரம் தரும் திருமாலின் அவதாரமான ஸ்ரீஹயக்ரீவர்

கல்வி, ஞானம், கலை, பேச்சுத் திறமை, புத்திக்கூர்மை ஆகிய அனைத்திற்கும் அதிபதியாக திகழ்பவர் திருமாலின் 18வது அவதாரமான ஸ்ரீஹயக்ரீவர்.
ஹயக்ரீவன் என்ற பெயரில் குதிரை முகம் கொண்ட அரசர் பார்வதி தேவியிடம், ‘ஹயக்ரீவனுக்கு ஹயக்ரீவனைத் தவிர வேறு யாராலும் மரணம் நிகழ்க்கூடாது’ என்ற வரத்தை பெற்றிருந்தார். பராசக்தியின் வரத்தை தவறான முறையில் பயன்படுத்தி பூவுலகில் அட்டாகசம் செய்து வந்த அரசரை யாராலும்  வெல்ல முடியவில்லை.
 
பிரம்மனிடம் இருந்த வேதங்களை எடுத்துக் கொண்டு கடலுக்குள் மறைத்து வைத்து விளையாட்டு காட்டிய ஹயக்ரீவனை கவர பரிமுகம் கொண்ட ஸ்ரீஹயக்ரீவர் அவதாரம் எடுத்த பெருமாள் வேதமறைகளை மீட்டு வந்தார்.
 
தமிழகத்தில் கடலூருக்கு அருகேயுள்ள திருவஹீந்திரபுரம் என்கிற திருவியந்தையில் ஸ்ரீஹயக்ரீவர் கோயில் கொண்டுள்ளார். ஆதிசேஷன் தவமிருந்து பேறு பெற்றதால் இந்த தலத்திற்கு திருவஹீந்திரபுரம் என பெயர் உண்டாயிற்று.
 
திருவஹீந்திரபுரம் தேவநாத பெருமாள் கோயிலை ஒட்டியுள்ள ஔஷத கிரி மலையில் ஸ்ரீஹயக்ரீவர் காட்சியளிக்கிறார். அனுமன் சஞ்சீவி மலையைப் பெயர்த்தெடுத்துப் பறந்துவரும்போது அம்மலையிலிருந்து சிதறி விழுந்த ஒரு பகுதியே ஔஷத கிரியாக ஆனது என்பார்கள்.
 
செட்டி புண்ணியம் ஹயக்ரீவருக்கு நெய் தீபம் ஏற்றி, ஏலக்காய் மாலை அணிவித்து வழிபட்டால் நினைத்த காரியம் வெற்றிக்கூடும். கல்லூரி, பள்ளியில் தேர்வு நேரங்களில் ஹயக்ரீவரை வழிபட்டால் கல்வி, ஞானம் பெற்று அதிக மதிப்பெண் எடுப்பார்கள் என்பது ஐதீகம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்