அம்மனுக்குரிய ஆடி மாத மகிமைகள்...!

ஆடி வந்தாலே ஊரெங்கும் அம்பிகை வழிபாடு களைகட்டும். தெய்வீகம் மிக்க ஆடி, அம்மனுக்குரிய மாதமாக போற்றப்படுகிறது. பூமிதேவி ஆண்டாள் நச்சியாராக  அவதரித்தது ஆடி மாதத்தில் தான். பார்வதியின் தவத்தை மெச்சிய சிவன், ஆடி மாதத்தை அம்மன் மாதமாக இருக்க வரமளித்தார். 
சிவனுடைய சக்தியை விட, அம்மனுடைய சக்தி ஆடி மாதத்தில் விசேஷமானதாக இருக்கும். ஆடி மாதத்தில் சிவன் சத்திக்குள் ஐக்கியமாகி விடுவதாக ஐதீகம். ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளி அம்மன் வழிபாட்டுக்கு மிகவும் உகந்த கிழமையாக கருதப்படுகின்றன.
 
மாவிளக்கு: ஆடிவெள்ளியன்று அம்மனுக்கு மாவிளக்கேற்றினால் அம்மன் மனம் குளிர்ந்து அருள்புரிவாள். பச்சரிசியை ஊற வைத்து இடித்து மாவாக்கி, அதில்  வெல்லபாகு, ஏலக்காய், சுக்குத்தூள் கலந்து காமாட்சி விளக்கு போல செய்து, அம்மன் முன் விளக்கேற்றி வைப்பர். அந்த விளக்கையே அம்மனாகக் கருதி  வணங்குவர். மாரி, காளி, துர்க்கை போன்ற பெண் தெய்வங்களுக்கு இந்த வழிபாட்டை மேற்கொள்வது சிறப்பு. இதனால் நோய்நொடி நீங்கி ஆரோக்கிய வாழ்வு  உண்டாகும்.
 
ஆடி மாதத்தை சக்தி மாதம் என்றும் அழைக்கப்படுகின்றன. எனவே இந்த மாதத்தில் விதை விதைப்பதை முன்னோர்கள் மேற்கொண்டனர். 'ஆடிப் பட்டம் தேடி  விதை" என்ற பழமொழி உருவானதற்கும் இதுவே காரணம்.
 
ஆடி மாதத்தில் பொதுவாகவே காற்று அதிகமாக வீசும். அந்தக் காலத்தில் எளிதில் ஜீரணிக்கக் கூடிய வகையிலான உணவுகள் (கூழ்) சாப்பிடுவது நல்லது. இதனால் ஆரோக்கியம் மேம்படும்.
 
ஆடி-18 விழா மிகவும் உன்னதமானது. ஆடி மாதத்தில் ஆடிப்பூரம், ஆடி வெள்ளி, நாகலட்சுமி பூஜை, வரலட்சுமி நோன்பு ஆகிய தினங்களில் விரதம் இருந்து அம்மனை தரிசிப்பது மிகவும் நல்லது. ஆடி அமாவாசையன்று முன்னோர்களுக்கு திதி கொடுத்தால், முன்னோர்களின் ஆசிகளைப் பெறலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்